சர்வதேச அளவில் மிகப்பெரிய சமையல் எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதியாளரான இந்தியா, தனது பயன்பாட்டில் பெரும் பகுதியினை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது.
தங்கம், சமையல் எண்ணெய் மட்டும் அல்ல, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பலவற்றையும் அதிகளவில் இறக்குமதி செய்து வரும் மிகப்பெரிய இறக்குமதியாளராகும்.
அடிப்படை இறக்குமதி விலை குறைப்பு
இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட பலவற்றின் அடிப்படை இறக்குமதி விலையினை குறைத்துள்ளது. சர்வதேச சந்தையில் மேற்கண்ட கமாடிட்டிகளின் விலையானது சற்றே மிதமாகி வரும் நிலையில், இந்தியா இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.
15 நாட்களுக்கும் திருத்தம்
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு முறை சமையல் எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி விலைகளை, இந்திய அரசு திருத்தம் செய்து வருகின்றது.
இது இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டிய வரியின் அளவைக் கணக்கிடுவதற்கு, இந்த விலைகள் பயன்படுத்தப்படுகின்றது.
விலை குறைய வழிவகுக்கலாம்
இந்திய அரசின் இந்த நடவடிக்கையானது கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி, சோயா எண்ணெய் விலைகள் குறைய காரணமாக அமையலாம். இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், விழாக்கால பருவத்தில் இது மேற்கொண்டு மக்களுக்கு உதவிகரமாக அமையலாம்.
வர்த்தக பற்றாக்குறை
இது பணவீக்கம் குறைய மட்டும் அல்லாது, வர்த்தக பற்றாக்குறையையும் குறைக்க வழிவகுக்கலாம். மொத்தத்தில் இது மக்களுக்கு குறைந்த விலையில் மேற்கண்ட பொருட்கள் கிடைக்க வழிவகுக்கலாம்.
இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்கம் இறக்குமதியாளராக இருந்து வருகின்றது.
உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை
சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு அரசியல் பிரச்சனைகள், குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பற்றாக்குறைக்கு பிறகு, சர்வதேச அளவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது குறிப்பிடத்தக்கது. இதனை மேற்கொண்டு ஊக்குவிக்கும் விதமாக சீனாவிலும் கோவிட் பிரச்சனை தற்போது வரையில் நீடித்து வருகின்றது. எனினும் தற்போது பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக விலைவாசியானது சற்றே கட்டுக்குள் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications