இந்திய வரலாற்று சிறப்புமிக்க கோலார் தங்க வயல்கள் (KGF), கர்நாடகாவில் 80 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர்பிக்கப்பட உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் தங்க உற்பத்தியை தொடங்கும் இந்த முயற்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கோலார் தங்க வயல்களில் 2001-ல் குறைந்த தங்க இருப்பு மற்றும் அதிகப்படியான உற்பத்தி செலவுகள் காரணமாக மூடப்பட்ட நிலையில், தற்போது தங்கம் விலை விண்ணை தொட்ட நிலையிலும், நவீன தொழில்நுட்பங்களால் குறைந்த செலவில் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் KGF மீண்டும் உயிர்பெறுகிறது.

1880களில் பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட இந்த கோலார் தங்க வயல்கள், உலகின் ஆழமான மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட தங்கச் சுரங்கங்களில் ஒன்றாக விளங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியில் 100 ஆண்டுகளில் 800 டன்னுக்கும் மேல் தங்கத்தை உற்பத்தி செய்த இந்த சுரங்கம் 2001-ல் மூடப்பட்ட பின்னர், செயலற்று போனது.
2024 ஜூன் மாதத்தில் கர்நாடக அமைச்சரவை, பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (BGML) நிறுவனத்திற்கு சொந்தமான 1,003 ஏக்கர் நிலத்தில் இருக்கும் சுமார் 13 கழிவு மேடுகளில் (tailings dumps) சுரங்கத்திற்கு அனுமதி அளித்தது. இந்த மேடுகளில் சுமார் 23 டன் தங்கம் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. பொது மற்றும் தனியார் துறை முதலீடுகளுடன், BGML இந்த புதிய தங்க உற்பத்தி முயற்சிதிட்டத்தை முன்னெடுக்கிறது.
தங்க உற்பத்தியில் நவீன முறைகளான ஹீப் லீச்சிங் (heap leaching) மற்றும் கார்பன்-இன்-பல்ப் (carbon-in-pulp) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், கோலார் தங்க வயலில் ஆண்டுக்கு 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 உற்பத்தி முறைகள் மூலம் முதல்கட்டமாக 13 கழிவு மேடுகளில் உள்ள எஞ்சிய தங்கத்தை திறம்பட மீட்க முடியும்.
உலகிலேயே அதிகளவில் தங்கத்தை வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் வேளையில், ஆண்டுக்கு 800-900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. தற்போது கோலார் தங்க வயலில் 750 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுமாயின் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை கணிசமாக குறைக்க முடியும்.
KGF மீண்டும் தொடங்கப்படும் வேளையில், இந்தியா தங்க இறக்குமதியை குறைக்கும். இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications