இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, இந்திய ரீடைல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு தனது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் வரிவாக்கம் செய்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தைகளில் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், ரீடைல் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையைக் கொண்டிருந்த பியூச்சர் குரூப் தற்போது கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை மொத்தத்தையும் ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 24,713 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், தற்போது போட்டி அடுத்தகட்டத்திற்குச் சென்றுள்ளது.
இந்தியாவின் மாபெரும் ரீடைல் சந்தையில் தற்போது நேரடியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனமும், ராதாகிஷன் தமனியின் டிமார்ட்-ம் நேருக்குநேர் போட்டிப் போட உள்ளது.
அம்பானி Vs தமனி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் அதிகளவிலான வர்த்தகக் கிளைகள் உடன், மிகப்பெரிய டெக் உதவிகளுடனும், எளிதில் விரிவாக்கம் செய்யக்கூடிய அளவிலும் இருக்கிறது. ஆனால் டிமார்ட், ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை ஒப்பிடுகையில் அளவில் சிறியது. ஆனால் இந்திய ரீடைல் சந்தையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் டிமார்ட் பிராண்ட் தான்.
முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் ரீடைல்
முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு : 82.5 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் ரீடைல் மதிப்பு : 3 - 4 லட்சம் கோடி ரூபாய்
ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் எண்ணிக்கை : 11,784 (ப்யூச்சர் குரூப் கடைகள் சேர்க்காமல்)
ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் இருக்கும் நகரங்கள் எண்ணிக்கை : 6,700
ரிலையன்ஸ் ரீடைல் ஜூன் காலாண்டு லாபம் : 431 கோடி ரூபாய்
முக்கிய வர்த்தகப் பொருள்: எலக்ட்ரானிக்ஸ் (34%), டிஜிட்டல் சேவைகள் (27%), உணவு மற்றும் மளிகை பொருட்கள் (21%), ஆடை மற்றும் பேஷன் பொருட்கள் (8%), பிற பொருட்கள் (10%)
ராதாகிஷன் தமனி - டிமார்ட்
ராதாகிஷன் தமனியின் சொத்து மதிப்பு : 16.1 பில்லியன் டாலர்
டிமார்ட் சந்தை மதிப்பு: 1.45 லட்சம் கோடி ரூபாய்
டிமார்ட் கடைகள் எண்ணிக்கை: 11,784
டிமார்ட் கடைகள் இருக்கும் நகரங்கள் எண்ணிக்கை: 6,700
டிமார்ட் ஜூன் காலாண்டு லாபம் : 48 கோடி ரூபாய்
முக்கிய வர்த்தகப் பொருள்: உணவு மற்றும் மளிகை பொருட்கள் (52.4%), ஆடை மற்றும் பொது விற்பனை பொருட்கள் (27.31%), ஹோம் கேர் மற்றும் பர்சனல் கேர் (20.29%)
ரீடைல் சந்தை
இந்தியாவின் 635 பில்லியன் டாலர் ரீடைல் வர்த்தகத்தில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் வர்த்தகம் மட்டும் சுமார் 50 சதவீதம். இந்த ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கும் போது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை விட டிமார்ட் இப்பிரிவு விற்பனையில் வலிமையாக உள்ளது.
ஆனால் ரிலையன்ஸ் ரீடைல் இப்பிரிவிலும் ஆதிக்கம் செலுத்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
போட்டி
ரிலையன்ஸ் ரீடைல், டிமார்ட் நிறுவனங்களைத் தாண்டி, பிர்லா குழுமத்தின் மோர், டாடா-வின் ஸ்டார் பஜார், தற்போது ஆன்லைன் விற்பனையில் இறங்கியுள்ள அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல நிறுவனங்கள் இந்திய ரீடைல் சந்தையைப் பிடிக்கக் கடும் போட்டி நிலவுகிறது.
இதில் வெற்றிபெறப் போவது யார்..?
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications