இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் ரீடைல், ரீசோகர்ஸ், டெலிகாம் என பல துறையில் மிகப்பெரிய விலை நிர்ணயம் செய்யும் ஆதிக்கத்தை கொண்டு உள்ளது. இதுவும் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து உயர்வாக இருக்க முக்கிய காரணமாக உள்ளது.
இந்த நிலையை மாற்ற பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களை டிஸ்மேன்டில் செய்ய வேண்டும் என விரல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். யார் இந்த விரல் ஆச்சார்யா? இவர் சொல்லும் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் எது..?
மக்களின் வருமான உயர்வுக்கும், பொருட்களின் விலை உயர்வுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், இது ஒரு நாட்டின் வர்த்தக போக்கை மாற்ற முடியும். உற்பத்தி செலவுகளும், லாப அளவுகளும் தான் ஒரு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் நிலையில் பெரிய நிறுவனங்கள் இந்த பொருளின் விலையை நிர்ணயம் செய்யும் ஆதிக்கம் கொண்டு உள்ளது. இது பணிவீக்கத்திற்கு வழிவகுக்கும் காரணியாகவும் உள்ளது என்பது தான் விரால் ஆச்சார்யா கூறுவது.
விரல் ஆச்சார்யா
விரல் ஆச்சார்யா இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக 2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் இருந்தார். தற்போது New York University Stern School கல்லூரியில் போராசிரியராக உள்ளார். இவர் Big 5 என நாட்டின் 5 முக்கிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களை பட்டியிலிடுகிறார்.
Big 5 பட்டியல்
இந்தியாவில் Big 5 பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா குரூப், ஆதித்யா பிர்லா குரூப், அதானி குரூப், பார்தி டெலிகாம் ஆகியவை உள்ளது. இந்த நிறுவனங்கள் சிறு மற்றும் உள்ளூர் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி வளர்ச்சி அடைந்து வருகிறது. இதேநேரத்தில் அரசின் விண்ணை முட்டும் கட்டணம் வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியில் இருந்து இந்த BIG 5 நிறுவனங்களை காப்பாற்றுகிறது என விரால் ஆச்சார்யா கூறியுள்ளார்.
நியூ இந்தியா தொழிற்துறை கொள்கை
இந்திய அளவில் பெரிய நிறுவனங்களை உருவாக்குவது முக்கியமானதாக நினைக்கும் வேளையில், நியூ இந்தியா தொழிற்துறை கொள்கைகள் அனைத்தும் நேரடியாக விலை நிலையை தொடர்ந்து அதிகமாக வைக்கவே வழிவகுக்கிறது எனவும் விரல் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
டிஸ்மேன்டில்
இந்த நிலையில் பெரிய நிறுவனங்களை டிஸ்மேன்டில் செய்து போட்டியை அதிகரித்து, விலையை நிர்ணயம் செய்யும் அதன் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் அதிக உற்பத்தி செய்தும் விலையை குறைக்க முடியாமல் உள்ள வேளையில் பொருளாதாரத்திற்கு விருப்பம் இல்லாத கட்டமைப்பு என்பதை உணர்ந்து வர்த்தக போக்கை மாற்ற வேண்டும் என வளரும் சந்தைகளின் Brookings Institute பேனல்-க்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சப்ளை செயின்
இதற்கு அடிப்படை காரணமாக விரல் ஆச்சாரியா கூறுவது, கடந்த ஆண்டு உலகம் முழவதும் சப்ளை செயின் பாதிப்பு குறைந்து விலைவாசியில் பெரிய சரிவை பதிவு செய்த போதும், இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 2 மாதத்திலும் ரீடைல் பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் தான் உள்ளது.
உள்ளீட்டு விலை
உள்ளீட்டு விலை அதாவது பொருட்களை தயாரிப்புக்கு தேவையான உற்பத்தி பொருட்களின் விலை குறைந்தும் இதன் பலன்களை இந்திய மக்கள் முழுமையாக பெறவில்லை. விரல் ஆச்சாரியா கூறும் Big 5 நிறுவனங்கள் உலோகம், நிலக்கரி, சுத்திகரிப்பு பெட்ரோலியம் பொருட்கள் உற்பத்தி, ரீடைல் வர்த்தகம் மற்றும் டெலிகாம் சேவை துறைகளை அதிகளவில் ஆதிக்கம் செய்து வருகிறது.
பணவீக்கம்
இந்தியாவின் core inflation கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகமாக இருக்கும் காரணத்தால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வட்டி விகிதமும் உயர்வாகவே உள்ளது. இந்தியாவின் core inflation அளவு தொடர்ந்து 17 மாதங்களாக 6 சதவீதத்திற்கு அதிகமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications