ஹைத்ராபாத்: ஏடிஎம் மெஷின்களில் ஏடிஎம் கார்டினை பொருத்தி, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏன் கிரெடிட் கார்டு மூலமாக கணிசமான தொகையை எடுக்க முடியும். ஆனால் ஏடிஎம் மூலம் தங்கம் எடுக்க முடியுமா? என்ற கேள்வி தலைப்பை படித்ததுமே பலருக்கும் வந்திருக்கலாம்.
ஆனால் இது உண்மை தான். ஏடிஎம்-மில் பணத்தை பெறுவதை போல, இனி ஏடிஎம் மூலம் தங்க நாணயங்களை பெற்று கொள்ளலாம்.

ஏடிஎம் மூலம் தங்க நாணயம்
ஏடிஎம் மூலம் தங்க நாணயம் என்பது நாட்டிலேயே முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ள அம்சமாகும். இந்த தங்க ஏடிஎம் ஆனது ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது. வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பயன்பாடானது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது நகைத் துறையிலும் இதுபோன்ற அம்சம் கொண்டு வரப்பட்டிருப்பது, நிச்சயம் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெறலாம்.

24 மணி நேரமும் தங்கம் பெறலாம்
அதுவும் ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்கத்தினை பெறுவது என்பது வரவேற்க தக்க விஷயமாகவும் உள்ளது.
இந்த தங்க ஏடிஎம்மினை கோல்ட் சிக்கா என்ற நிறுவனம், ஓபன் கியூப் டெக்னாலஜிஸ் என்ற தொழில் நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் முதல் ரியல் டைம் தங்க ஏடிம் மெஷின் ஆகும்.

வெளிப்படை தன்மை கொண்டது
இந்த தங்க ஏடிஏம் மூலமாக மக்கள் தங்கள் ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக கூட தங்க நாணயங்களை வங்கிக் கொள்ள முடியும். இந்த ஏடிஎம்மில் நேரடியாக விலை காட்டப்படும். இதன் மூலம் விலை வெளிப்படையானதாக இருக்கும் என இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சை தாருஜ் தெரிவித்துள்ளார்.

என்னென்ன அளவுருக்களில் பெறலாம்?
இந்த தங்க ஏடிஎம் மூலம் 99.9% தூய்மையான தங்கம் கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிம் மூலமாக அரை கிராம், 1 கிராம், 2 கிராம், 5 கிராம், 10 கிராம், 20 கிராம், 50 கிராம், 100 கிராம் என பலவாறான அளவுகளில் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல இடங்களில் ஏடிஎம்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 3000 மெஷின்கள் நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்பை பெரும் பட்சத்தில் பெரியளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக இந்த நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தங்க ஏடிஎம் ஆனது ஹைதராபாத்தின் குல்ஜர் ஹவுஸ், வாராங்கல், செகந்திராபாத், கரிம் நகர் உள்ளிட்ட இடங்களில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டெக்னாலஜிக்கள்
இந்த தங்க ஏடிஎம்கள் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம். குறிப்பாக விலையில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. இதுவே மக்கள் மத்தியில் சாதகமாக அமையலாம். மேலும் இதன் மூலம் தங்கத்தின் தரத்திலும் ஏமாற்ற முடியாது. இது மேற்கொண்டு தங்க ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வத்தினை தூண்டலாம். மொத்தத்தில் இனி நகைகளை கூடரோப்போக்கள் விற்பனை செய்யும் காலமும் வரலாம். டெக்னாலஜிக்கள் எல்லாவற்றையும் மாற்றலாம்.