பருவமழை-க்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் வேளையில் வறட்சி போன்ற நிலைமை உருவாகும் என்ற கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் எல் நினோ விளைவுகள் மூலம் இந்தியாவில் உணவு பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற கவலைகள் நாடு முழுவதும் அதிகமாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் விவசாய உற்பத்தி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் வேளையில் பணவீக்கம் மிகவும் உயர்வாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ மற்றும் லா நினா ஆகிய உள்ள காலநிலை வடிவங்கள் உள்ளது. இவை இரண்டும் உலகளாவிய காலநிலையை பாதிக்கும் வல்லமை கொண்டது. லா நினா விளைவு மூலம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும்போது, எல் நினோ உலர் மற்றும் வெப்பமான கோடை மற்றும் பருவமழை பற்றாக்குறையை உருவாக்குகிறது.
இதனால் எல் நினோ விளைவுகள் இந்தியாவின் விவசாய உற்பத்தியை கடுமையாகப் பாதிக்கும் என்பதால் விளைபொருட்களின் விலை பெரிய அளவில் உயர்ந்து நுகர்வோர் பணவீக்கத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
பணவீக்கம்
அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்துவதை இன்னும் நிறுத்தவில்லை, இதற்கு முக்கியமான காரணம் பணவீக்கம் தொடர்ந்து பல்வேறு காரணத்தால் அதிகரித்து வருகிறது, இதைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் மட்டுமே முக்கியமான கருவியாக இருக்கிறது.
ரஷ்யா முடிவு
இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து ஒட்டுமொத்த உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்தும் முக்கிய காரணியாக உள்ளது. இது இந்தியாவையும் பாதிக்கும், ரஷ்யா தள்ளுபடி கொடுத்தாலும், அதைச் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் தான் கொடுக்கிறது.
உணவுப் பொருட்கள் விலை
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பருவமழை குறைந்து உணவு பொருட்கள் விலை அதிகரிக்கும் என்ற எல் நினோ கணிப்பு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பெரும் வறட்சி போன்றவை இல்லை, இதற்கு மாறாக அரசி முதல் பருப்பு, காய்கறி வரை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளோம்.
ஜூன்-டிசம்பர் மாதங்கள்
இந்த நிலையில் இந்தியாவில் ஜூன்-டிசம்பர் மாதங்களில் 55-60% வாய்ப்புகள் உடன் எல் நினோ பாதிப்பு இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையை பாதிப்பது மட்டும் அல்லாமல் ஏழை மக்களை மேலும் வறுமையில் தள்ளும் பெரும் பாதிப்பு உள்ளது.
தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) 2023 ஆம் ஆண்டின் ஜூன்-டிசம்பர் மாதங்களில் 55-60% வாய்ப்புகள் உடன் எல் நினோ உருவாகக்கூடும் என்று கணித்துள்ளது. இது கட்டாயம் ஜூன்-அக்டோபர் மாதங்களில் இந்தியப் பருவமழையை மோசமாகப் பாதிக்கும்.
எல் நினோ வாய்ப்பு
பிப்ரவரி மாதம் எல் நினோ-விற்கான வாய்ப்பு 45% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் என NOAA கூறிய ஆறு முறைகளில், மூன்று வருடங்கள் மட்டுமே உண்மையில் எல் நினோ உருவானது, அதேநேரம் மற்ற காலக்கட்டத்தில் பருவமழை சாதாரணமாக இருந்தன. ஆனாலும் 2023 ஆம் ஆண்டு எல் நினோ-வுக்கான கணிப்பு 55-60% ஆக உள்ளது. மேலும் இந்த அளவு பல ஆண்டுகளில் மிக அதிகமான கணிப்பு ஜெஃப்ரிஸ் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கை
இதேபோல் Emkay Global இன் ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் வறட்சி உருவான அனைத்து ஆண்டுகள் மற்றும் நிகழ்வுகளும் எல் நினோ ஆண்டுகளில் இருந்தன. இந்த ஆண்டு வறட்சி மோசமான விலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும், ஏற்கனவே இறுக்கமான விநியோக நிலைமை உருவாகும்.
அரசின் நிதிநிலை தடுமாற்றம்
கடுமையான விலை உயர்வு கருத்தில் கொண்டு அரசின் நிதி நிலைமையை மேலும் இறுக்கும். ஏனெனில் விவசாயத் துறைக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்ய குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுகள் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் சில்லறை விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் அரசு தானியங்களை கொள்முதல் செய்வதற்கான திறனை குறைக்கும் என்றும் Emkay Global தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications