இந்தியாவில் தங்கத்திற்கான தேவையை குறைப்பதற்காக வரையில், அரசு பல்வேறு கடுபிடியான நடவடிக்கை எடுத்த போது கூட குறையாத தங்கம் இறக்குமதி, இந்த கொரோனாவினால் வீழ்ச்சி கண்டுள்ளது.
அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல. 57% குறைந்துள்ளது. ஆனால் இன்றளவிலும் தங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
அதோடு அடுத்த சில வாரங்களில் பண்டிகை காலம் வரவிருப்பதால், தங்கம் விலையானது ஏற்றம் காண வாய்ப்புள்ளது. ஏனெனில் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
தங்கம் இறக்குமதி வீழ்ச்சி
இந்த நிலையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் -செப்டம்பர் மாதத்தில்) தங்கம் இறக்குமதியானது 57 சதவீதம் குறைந்து, 6.8 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் 50,658 கோடி ரூபாயாக ) வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 15.8 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் 1,10,259 கோடி ரூபாயாக) இருந்துள்ளது.
வெள்ளி இறக்குமதியும் வீழ்ச்சி
இதே வெள்ளி இறக்குமதியானது கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 63.4 சதவீதம் குறைந்து 733.57 மில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் 5,543 கோடி ரூபாயாக ) வீழ்ச்சி கண்டுள்ளது.
இது அரசின் கடுமையான நடவடிக்கை இல்லாமலேயே வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வழிவகுத்துள்ளது. ஒரு கால கட்டத்தில் தங்கம் இறக்குமதியை குறைக்கவும், வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதற்காகவும், அரசு தங்க இறக்குமதி வரியை அதிகரித்தது. அதே நேரம் ஜிஎஸ்டி வரியையும் அதிகரித்தது.
தங்கத்திற்கு சாதகமான பல காராணிகள்
கொரோனாவின் காரணமான பொருளாதாரம் என்னவாகுமோ என்ற நிலையே இருந்து வருகிறது. மேலும் அமெரிக்கா - சீனாவிடையே நிகழ்ந்து வரும் வர்த்தகபோர், வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், கொரோனா தடுப்பூசி, என பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளன.
கிராமப்புறங்களில் தேவை அதிகரிக்கும்
அதோடு இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இன்னும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு கிராமப்புறங்களில் பருவ மழையும் சரியான நேரத்தில் பெய்துள்ளதால் உற்பத்தி அதிகரிக்கும் என்றும், இதனால் மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
இதன் காரணமாக தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம். இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கப்படலாம், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கத்திற்கான விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஆக தங்கம் நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரம் தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications