இந்தியாவில் தங்கத்தின் டிமாண்ட் குறைந்தது.. என்ன காரணம் தெரியுமா..?!

இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் இறக்குமதியில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது. உலகிலேயே ரீடைல் சந்தை விற்பனைக்காக அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

தங்கம் இறக்குமதியில் இந்தியாவும், சீனாவும் முதல் இடத்தை அடையத் தொடர்ந்து போட்டிப்போட்டு வரும் நிலையில், நவம்பர் மாதம் தங்கம் இறக்குமதியில் பெரிய அளவில் பின்தங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

பொதுவாகவே இந்தியாவில் பண்டிகை காலமான நவம்பர் மாதத்தில் தங்கம் விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்திற்காக, வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படும். இப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கம் கிட்டதட்ட 90 சதவீதம் ரீடைல் சந்தை விற்பனைக்கு வருவது வழக்கம்.

ஆனால் இந்த முறை இறக்குமதியே மிகவும் குறைவான அளவை பதிவு செய்துள்ளது.

41 சதவீதம் சரிவு

41 சதவீதம் சரிவு

கொரோனா பாதிப்பின் எதிரொலியாகவும், தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதன் காரணமாகவும் நவம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி எப்போதும் இல்லாமல் சுமார் 41 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நவம்பர் மாத்தில் இந்தியாவில் வெறும் 33.1 டன் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 48 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 2020

அக்டோபர் 2020

ஆனால் அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் நவம்பர் மாதம் தங்கம் இறக்குமதி செய்யப்படும் அளவு அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதம் 29 டன் தங்கத்தை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்துள்ள நிலையில் நவம்பர் மாதம் இதன் அளவு 33.1 டன்னாக உயர்ந்துள்ளது.

டிஜிட்டல் கோல்டு

டிஜிட்டல் கோல்டு

நவம்பர் 2020ஆம் ஆண்டில் மக்கள் மத்தியில் டிஜிட்டல் கோல்டு திட்டத்தின் மூலம் தங்கம் வாங்குவதில் பெரிய அளவிலான ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாகத் தீபாவளி பண்டிகைக்கு முன்பு பேடிஎம், போன்பே வாயிலாக மக்கள் அதிகளவிலான தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கியுள்ளனர்.

2020 மிகவும் மோசம்

2020 மிகவும் மோசம்

இந்த வருடம் தங்க விலை அதிகமாக இருக்கும் காரணத்தாலும், பொருளாதாரம் மந்தமாக இருக்கும் காரணத்தாலும் தங்கம் விற்பனை மற்றும் இறக்குமதி பெரிய அளவிலான சரிவு ஏற்பட்டு உள்ளது. இதேவேளையில் மக்கள் தங்களது பழைய தங்க நகைகளைப் பணத் தேவைக்காக அதிகளவில் இந்த லாக்டவுன் காலத்தில் விற்பனை செய்துள்ளனர்.

63 சதவீதம் பாதிப்பு

63 சதவீதம் பாதிப்பு

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் தங்கம் இறக்குமதி அளவீடு சுமார் 63 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+