உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் தங்கம் விலை உயர்ந்ததன் காரணமாக, இந்தியாவின் தங்கப் கையிருப்பு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு, முதல் முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை படைத்துள்ளது. மத்திய வங்கியின் தொடர்ச்சியான கொள்முதல் மற்றும் சர்வதேச சந்தையில் விலையேற்றம் ஆகிய இரண்டும் இந்த பிரமாண்ட வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
தங்க கையிருப்பு விவரம் : ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 3.595 பில்லியன் டாலர் அதிகரித்து, 102.365 பில்லின் டாலராக உயர்ந்துள்ளது.

இருப்பினும், இந்திய ரூபாயை நிலை நிறுத்துவதற்காக ரிசர்வ் வங்கி டாலர்களை வெளியிட்டதால், நாட்டின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 2.18 பில்லியன் குறைந்து 697.784 பில்லியன் டாலராக பதிவானது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. முன்னர் 7% க்கும் குறைவாக இருந்த தங்கத்தின் பங்களிப்பு, தற்போது கிட்டத்தட்ட 15% ஆக உயர்ந்துள்ளது.
சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நாட்டின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கம் இந்த அளவுக்குப் பெரிய பங்களிப்பைச் செலுத்துவது 1996-97 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் பதற்றம் : மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிட சொத்தாக கருதி அதிக அளவில் முதலீடு செய்கின்றனர்.
வர்த்தகப் போர்கள் : அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் தூண்டியுள்ள வர்த்தகப் போர்களும், தங்கத்தின் மீதான தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள், புவிசார் அரசியல் பதற்றங்களால் உருவாகும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், தங்கத்தை தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் ஒரு பாதுகாப்பான சொத்தாகப் பெருமளவில் குவித்து வருகின்றன. குறிப்பாக, ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் தங்கத்தின் அளவு 2021-ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய தங்க இருப்பு : மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கி 2024 ஆம் ஆண்டு முதல் சுமார் 75 டன்கள் தங்கத்தை தனது கையிருப்புடன் சேர்த்துள்ளது. இதன் மூலம், மொத்த இருப்பு 880 டன்னாக உயர்ந்துள்ளது. இது தற்போது இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் சுமார் 14% ஆக உள்ளது.
தங்கத்தின் மீதான ஆர்வம் : சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடாக உள்ளது. நாட்டின் தங்க தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை நம்பியே இருக்கிறது. திருமணங்கள் போன்ற விழாக்களில் மணமக்கள் பரிசளிப்பதில் தொடங்கி, குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வழியாகவும், ஒரு அடையாளச் சின்னமாகவும் தங்கம் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
இந்தியாவின் இந்தக் குறிப்பிடத்தக்க தங்க கையிருப்பு அதிகரிப்பு, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கும், உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் ஒரு சாதகமான அறிகுறியாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications