என்னதான் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தாலும்.. தங்கத்தை விரும்பி வாங்கும் மக்களுக்கு அதன் மீதான மோகம் என்றுமே குறைவதில்லை. அதுவும் இந்தியக் குடும்பங்களின் பிரதான முதலீடே தங்கம் தான். தங்கம் ஒரு முதலீடாக மட்டுமின்றி பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக சேர்த்து வைக்கும் நகைகள் எதிர்கால சந்ததியினருக்கு வழங்கப்படுவதோடு.. அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய உதவியாளராகவும் இருந்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் 25,000 டன் தங்கத்தை வைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியக் குடும்பங்கள் உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட தங்க உரிமையாளர்களாக உள்ளன.

இந்தியப் பெண்கள் 1 கிராம் நகையாவது மாதம் மாதம் வாங்கி வைப்பதில் தான் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். முக்கியமாக நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிலர் தங்கம் வாங்குகின்றனர். இப்படி தங்கத்தை விரும்பி வாங்கும் மக்கள் அதிகமாக இருப்பதால் அவற்றைக் கொண்டிருக்கும் குடும்பங்களும் அதிகரித்துவிட்டன. தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை உறுதிப்படுத்தி வகையில் செபியில் பதிவு செய்யப்பட்ட ஆய்வாளர் ஒருவர் வியக்க வைக்கும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் இந்தியக் குடும்பங்கள் வெறும் 1 வருடத்தில் மட்டுமே தங்கத்தின் மூலம் 750 பில்லியன் டாலர் அளவிற்கு செல்வ அதிகரிப்பை கண்டிருக்கின்றனராம். அதாவது ஏற்கனவே தாங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு 750 மில்லியன் டாலர் வரை அதிகரித்து இருக்கிறதாம். இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் இந்திய குடும்பங்களுக்கு தங்கத்தின் மீது எவ்வளவு பற்று என்று.
X தளத்தில் இந்தியாவில் தங்கத்தை விரும்பி வாங்கும் மக்களை சுட்டிக்காட்டும் வகையில் அந்த ஆய்வாளர் ஒரு போஸ்டை பகிர்ந்திருந்தார். அதில் இந்தியாவில் மொத்தமாக 25,000 டன் தங்கத்தை இந்தியக் குடும்பங்கள் வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது உலகின் முதல் 10 மத்திய வங்கிகளின் ஒருங்கிணைந்த தங்க இருப்பை விட அதிகமாகும். இதில் அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, இந்தியா போன்ற முன்னணி நாடுகளும் அடங்கும்.
2024-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 75,549-ஆக இருந்தது இந்த விலையை வைத்து பார்க்கும் போது சுமார் ரூ.188.9 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தை இந்திய குடும்பங்கள் வைத்திருக்கின்றன. தற்போது இந்த மதிப்பு 220 லட்சம் கோடியை நெருங்கி வருகிறது.
இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரையில் பணவீக்கம், நாணய மாற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications