அமெரிக்காவை நம்ப முடியாது.. ரூட்டு போட்டு கொடுத்த இந்தியா.. அப்படியே பாலோ செய்யும் ஐரோப்பிய நாடுகள்!

ஒரு காலத்தில் யாரும் காண்டுக்கொள்ளாத தங்கம் இன்று முக்கிய சொத்தாக மாறியிருக்கும் காரணத்தால் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு சொந்தமான தங்கத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகிறது. இந்த திடீர் இட மாற்றத்திற்கு முக்கியமான அரசியல் காரணமும் உள்ளது என்பது தான் தற்போதைய நெருக்கடி.

சமீபத்தில் இந்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வைக்கப்பட்டு இருந்த தங்கத்தை இந்தியாவுக்கு ரகசியமாக கொண்டு வந்தது யாரும் மறந்திருக்க முடியாது. இதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் 880 டன் தங்க இருப்பில் சுமார் 78 சதவீதம் இந்தியாவுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவை நம்ப முடியாது.. ரூட்டு போட்டு கொடுத்த இந்தியா.. அப்படியே பாலோ செய்யும் ஐரோப்பிய நாடுகள்!

கிட்டத்தட்ட இதேவேலையை தான் தற்போது ஐரோப்பிய நாடுகளும் செய்துள்ளது, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புறவை வைத்திருந்தாலும் ரஷ்யா-வுக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கையாக கொண்டு தங்கத்தை இடம் மாற்றியுள்ளது.

பொதுவாக உலக நாடுகள் தங்களுடைய வர்த்தகம், நிதி தேவை, நிதி பரிமாற்றம் ஆகிய காரணங்களுக்காக, தங்களுடைய முக்கிய வர்த்தக கூட்டணி நாடுகளின் மத்திய வங்கிகளில் தங்கத்தை வைத்திருக்கும் வழக்கம் உள்ளது. அப்படி உலக நாடுகள் பல அமெரிக்கா, கனடா, லண்டன் மத்திய வங்கிகளில் தங்கக்தை சேமித்து வைத்துள்ளது.

அப்படியிருக்கும் தங்கத்தை, இந்தியா போலவே ஐரோப்பிய நாடுகளும் தாய் நாட்டிற்கும், தனது மற்ற முக்கிய நட்பு நாடுகளும் மாற்றியுள்ளது, அமெரிக்கான மீதான பிம்பத்தை மாற்றியுள்ளது தற்போது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் மத்திய வங்கி அமெரிக்காவில் இருக்கும் 129 டன் தங்கத்தை பாரிஸ்-க்கு இடம் மாற்றியுள்ளது, நெதர்லாந்து மத்திய வங்கி சுமார் 86 டன் தங்கத்தை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருந்து லன்டனுக்கு இடம் மாற்றியுள்ளது, அமெரிக்க மத்திய வங்கியில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் ஜெர்மனி சுமார் 300 டன் தங்கத்தை தாய் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

தங்கத்தை அமெரிக்காவில் இருந்து இடம் மாற்றம் செய்ய முக்கியமான 2 காரணங்கள் உள்ளது.

முதல் காரணம்.. உலக நாடுகள் மத்தியில் தற்போது போர் அச்சம் அதிகரித்துள்ளதால் நட்புறவிலும், இதேபோல் வரி விதிப்பு மூலம் வர்த்தக உறவிலும் பெரும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரம், நாணய மதிப்பை கட்டுப்படுத்தும் தங்தத்தை வெளிநாட்டில் வைப்பதை தாண்டி, உள்நாட்டில் பாதுகாப்பாக வைக்க முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.

2வது காரணம்.. பொருளாதார நெருக்கடி அல்லது பொருளாதார தடை விதிப்பு வந்தால், முக்கிய நிதி ஆதாரமாக இருக்கும் தங்கத்தை மற்ற நாடுகளில் அச்சத்துடன் வைப்பதை தாண்டி உள்நாட்டில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு காரணமும் முக்கியம் என்பது போல் ஒரு சம்பவமும் நடந்துள்ளது.

அமெரிக்கா - ரஷ்யா மத்தியிலான வர்த்தக போரின் காரணமாக மேற்கத்திய நாடுகள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை முடக்கியது. இதேபோல் ஜி7 நாடுகள் சர்வதேச நிதியியல் பரிமாற்ற அமைப்பை ஆயுதமாக பயன்படுத்தி தனது எதிரி நாடுகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளை விதிக்க துவங்கிய காரணத்தால் தற்போது உலக நாடுகள் தங்களுடைய தங்கத்தை தாய் நாட்டிற்கு திருப்பி வருகிறது.

இதேபோல் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் முடக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட பிற நாடுக்கு சொந்தமான சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அல்லது லாபத்தை உக்ரைன் போருக்கான நிதி ஆதாரமாகவும் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சொத்துக்கள் மீதான தடைகள் நிரந்தரமாக இருக்கும் வகையில் சூழ்நிலைக்களை மேற்கத்திய நாடுகள் உருவாக்கியுள்ளது.

இந்த நிலை தற்போது ரஷ்யா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக் என பல நாடுகள் எதிர்கொண்டு வருகிறது. இந்த அச்சம் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் (வரி விதிப்பு மிரட்டல்களுக்கு பின்பு) வந்துள்ள காரணத்தால் தங்களுடைய சொத்துக்களை வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்கு திருப்பி வருகிறது.

இத்தகைய நிலையை எதிர்க்கவே சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து டாலருக்கு மாற்று நாணயத்தையும், SWIFT பண பரிமாற்ற முறையில் இருந்து விலகி தனிப்பட்ட நாணய பரிமாற்ற முறையை உருவாக பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் தொடர்ந்து விவாதித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+