இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு மூலம் ஏற்பட்டு உள்ள மின்சார தட்டுப்பாடு பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில், மின்சார உற்பத்தி நிறுவனங்கள் 3 மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தை விற்பனை செய்ய துவங்கியுள்ளது.
மின்சார உற்பத்தி
பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சார அளவீடுகள் குறைந்துள்ள நிலையில், மக்களுக்கும் தொழிற்சாலைக்கும் போதுமான மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக பவர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு
இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தாலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
3 மடங்கு விலை உயர்வு
இந்த சூழ்நிலையில் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்கள் நிலக்கரி பிரச்சனைக்கு முன்பு ஒரு யூனிட் மின்சாரம் 4 முதல் 6 ரூபாய் அளவில் மின்சாரத்தை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 16 முதல் 18 ரூபாய் வரையில் விலையை உயர்த்தியுள்ளது.
அதிக லாபம்
இன்றைய சூழ்நிலையில் ஹிந்துஸ்தான் பவர் லிமிடெட், அதானி பவர் ஸ்டேஜ் 2 மற்றும் டீஸ்டா ஸ்டேஜ் 3 ஆகியவை ஒரு யூனிட் மின்சாரத்தை 18 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளது. இதனால் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தை பெற்று வருகிறது.
இறக்குமதி நிலக்கரி
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் டாடா பவர், அதானி பவர், எஸ்ஸார் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் உடன் அதிகளவிலான மின்சார விநியோக ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி மூலம் இயங்கி வருகிறது.
அலோக் குமார்
இதேபோல் டாடா பவர், அதானி பவர், எஸ்ஸார் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் இக்காலக்கட்டத்தில் முழுமையாக இயங்க வேண்டும் என்றும், ஒப்பந்தம் படி முழுமையாக மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்பதையும் மின்சார துறை செயலாளர் அலோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடுமையான நடவடிக்கை
இதேபோல் டாடா பவர், அதானி பவர், எஸ்ஸார் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஒப்பந்தம் செய்யப்பட்ட மாநிலங்களுக்கு முழுமையாக அளிக்காமல் பிற தரப்பு அளிக்கப்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications