இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான டாடா குழுமம் உப்பு முதல் விமானம் வரையில், பல்வேறு வணிகங்களில் வெற்றிகரமாக கோலேச்சி வருகின்றது.
தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் விரிவாக்கம் செய்தும் வருகின்றது. முதலீடுகளையும் செய்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது டாடா குழுமம் குறைந்தபட்சம் 20 பியூட்டி டெக் ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அழகுசாதன பொருட்கள் விற்பனை
அம்பானியும் அதானியும் ஒரு புறம் போட்டி போட்டுக் கொண்டு புதுபிக்கதக்க ஆற்றல் என எதிர்காலத்திற்கு ஏற்ப, மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் டாடா குழுமமோ எளிதில் மக்களை சென்றடையும் விதமாகவும், அதேசமயம் மிகப்பெரிய, சந்தையை பயன்படுத்திக் கொள்ளவும் அழகுசாதன பொருட்கள் விற்பனையை செய்ய திட்டமிட்டுள்ளது.
பெண்களுக்கு ஆர்வம் அதிகம்
பொதுவாக பெண்களுக்கு அழகுசாதன பொருட்கள் மீதான ஆர்வம் என்பது மிக அதிகம். அதிலும் தற்போது பெண்களிடையே இன்னும் ஒரு படி மேலே போய் தங்களது அழகினை அதிகரிக்க, அதற்கு தேவையான பொருட்கள் வாங்கிவதில் ஆர்வம் மிக அதிகம். இதனையே அடிப்படையாக கொண்டு சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது வணிகத்தினை செய்து வருகின்றன. பல கோடி வருவாயினையும் ஈட்டி வருகின்றன.
டாடாவின் திட்டம் என்ன?
அப்படி இருக்கும் பட்சத்தில் அழகு சாதன துறையில் டாடா குழுமம் நுழைய திட்டமிட்டிருப்பது ஆச்சரியத்தினை அளிக்கிறது. அதேசமயம் பெண்களை குறி வைத்து இத்தகைய வணிகத்தினை செய்ய திட்டமிட்டிருப்பது நிச்சயம் பலனை கொடுக்கலாம் என டாடா குழுமம் நினைத்திருக்கலாம்.
வெளிநாட்டு பிராண்டுகளுடன் பேச்சு வார்த்தை
இதற்காக பல்வேறு வெளி நாட்டு பிராண்டுகளுடன் டாடா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. டாடா குழுமம் தொடங்கவுள்ள இந்த ஷோரூம்களில் பல்வேறு பிரத்யேகமான வெளி நாட்டு பிராண்டுகள் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
ட்ஜிட்டல் சேவை
அது மட்டும் அல்ல, டாடாவின் இந்த ஷோரூம்களில் விர்சுவல் மேக்கப் மற்றும் டிஜிட்டல் ஸ்கின் டெஸ்ட் மூலம் , வாடிக்கையாளார்களுக்கு பொருத்தமான பிராண்டுகளையும் பரிந்துரை செய்யலாம் என தெரிகிறது. இதன் மூலம் வாடிக்கையாளார்களும் பயன்பெற முடியும். வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும் என திட்டமிட்டுவதாகவும் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
வளர்ந்து வரும் அழகு கலை சந்தை
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், அழகு கலைத் துறை என்பது வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இந்த துறையில் போட்டிகள் குறைவு. 16 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையில் உள்நாட்டில் நய்கா நிறுவனம் போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இலக்கு யார்?
டாடா நிறுவனம் 18 வயது முதல் 45 வயதிலானவர்களுக்கு ஏற்றவாறு அழகு கலை பொருட்களை வாங்குவதற்கு டாடா திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. இதற்காக பிரபலமான பல்வேறு பிரபலமான பிராண்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications