இந்தியர்களா இப்படி!! உலக தங்க கவுன்சில் ஆச்சர்யம்!! தங்கம் விலை உயர்வால் நடந்த மாற்றம்!!

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. குறிப்பாக ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தங்கத்தின் விலை உயர்வு ராக்கெட் வேகத்தில் இருந்தது என கூறலாம் . அந்த அளவிற்கு தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய வரலாறு காணாத உச்சத்தை எட்டியது .

சாமானிய மக்கள் வாங்க முடியாத விலைக்கு தங்கத்தின் விலை சென்றது. இத்தகைய சூழலில் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வால் பெரிய மாற்றமே நடந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஜூலை மற்றும் செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தங்கத்திற்கான டிமாண்ட் 16 சதவீதம் குறைந்துவிட்டதாம் .

இந்தியர்களா இப்படி!! உலக தங்க கவுன்சில் ஆச்சர்யம்!! தங்கம் விலை உயர்வால் நடந்த மாற்றம்!!

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் தங்கத்தின் விலை 23 சதவீதம் உயர்ந்திருக்கிறது , ஆனால் இந்திய சந்தையில் தங்கத்திற்கான தேவை 14 சதவீதம் குறைந்து 209.4 டன்களாக சரிவடைந்தது என உலக தங்க கவுன்சில அறிக்கை கூறுகிறது. குறிப்பாக ஜூலையிலிருந்து செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்க நகைகளுக்கான டிமாண்ட் 31% சரிவடைந்து விட்டதாம் . ஆனால் முதலீட்டு நோக்கத்திற்காக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து நாணயங்கள் மற்றும் பார்களில் முதலீடு செய்வது 20% என உயர்ந்தது என உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கை கூறுகிறது.

முதலீட்டு நோக்கத்தில் நாணயங்கள் மற்றும் கட்டிகளாக 91.6 டன்கள் தங்கம் வாங்கப்பட்டது, இதன் மதிப்பு 88, 970 கோடி என்கிறார் உலக தங்க கவுன்சிலுக்கான இந்தியாவிற்கான தலைவர் சச்சின் ஜெயின் . அதாவது இந்தியர்கள் மத்தியில் தங்கத்தை நகையாக வாங்கும் போக்கும் மாறி முதலீட்டு நோக்கத்திற்காக நாணயமாகவும் கட்டிகளாகவும் வாங்கும்போது அதிகரித்து இருப்பதையே இது காட்டுவதாக அவர் கூறுகிறார் .

இந்தியர்களா இப்படி!! உலக தங்க கவுன்சில் ஆச்சர்யம்!! தங்கம் விலை உயர்வால் நடந்த மாற்றம்!!

குறிப்பாக நகையாக தங்கத்தை வாங்குவது 31% குறைந்ததாகவும் , 117.7 டன்கள் தங்கமே நகையாக விற்க விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறும் அவர் பெரும்பாலான மக்கள் குறைந்த கேரட் அளவு கொண்ட குறைந்த எடை கொண்டு தங்க நகைகளை அதிகம் வாங்கியதை காண முடிந்தது என கூறியிருக்கிறார். அதேபோல தங்கம் இறக்குமதி என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 194.6 டன்கள் என 37 சதவீதம் சரிவடைந்ததாம். ரீசைக்கிளிங் அதாவது பழைய தங்கத்தை மறு பதிப்பு செய்து பயன்படுத்துவதும் 7 சதவீதம் குறைந்ததாம்.

பெரும்பாலான மக்கள் தங்களுடைய பழைய தங்க நகைகளை மாற்றி பணமாக்கிக் கொள்ளாமல் புதிய நகைகளை வாங்குவதற்காக பயன்படுத்தினர் . இவ்வாறு பழைய நகையை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய நகை வாங்கும் போக்கு 40 சதவீதம் உயர்ந்திருந்தது என சச்சின் ஜெயின் கூறுகிறார் . தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே குறையவில்லை என கூறும் அவர் அதை எந்த வடிவத்தில் வாங்குகிறார்கள் என்பதில் தான் பெரிய மாற்றத்தை காண முடிந்தது என தெரிவிக்கிறார்.

ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் என்பது 462.4 டன்களாக இருந்தது எனவும் இந்த ஆண்டு முழுவதும் இது 600 இலிருந்து 700 டன்கள் வரை எட்டும் எனவும் நம்புவதாக அவர் கூறியிருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+