இந்திய பங்கு சந்தை கடந்த ஒரு வார வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணமாக இஸ்ரேல் மற்றும் சீன சந்தைகள் விளங்குகிறது. சென்செக்ஸ் குறியீடு வெறும் ஐந்து நாட்களில் 4,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, மும்பை சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பை அதிர்ச்சியூட்டும் வகையில் 16 லட்சம் கோடி ரூபாயை இழக்க செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 30 பங்குகளைக் கொண்ட BSE சென்செக்ஸ் குறியீடு 809 புள்ளிகள் அல்லது 0.98% சரிந்து, 81,688.4 புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்டது. அதே நேரத்தில், பரந்த NSE நிஃப்டி 200 புள்ளிகள் அல்லது 0.79% சரிந்து, 25,050 புள்ளிகளில் முடிந்தது.

ஈரான்-இஸ்ரேல் மோதல் அதிகரித்து வருவதும், சீனாவின் 140 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்குவிப்பு ஆகியவை இணைந்து இந்திய சந்தையில் இருக்கும் முதலீட்டை வெளியேற்ற முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தையில் பொதுவாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் தான் அதிகம், அந்த வகையில் சீன பங்குச்சந்தை பல ஆண்டுகளுக்குப் பின்பு கவர்ச்சிகரமானதாக மாறியிருக்கும் வேளையில் முதலீட்டாளர் இந்தியச் சந்தையைத் துடைத்துவிட்டு அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல், கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய சப்ளை செயினில் கணிசமான தாக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது அனைத்தும் இணைந்து பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து மூலதன வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்திய பங்குச்சந்தையில் தங்களுடைய பங்கு இருப்பை விற்பதில் தீவிரமாக உள்ளனர். கடந்த நான்கு வர்த்தக நாளில் வியாழக்கிழமை வரையில் கிட்டத்தட்ட 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திங்களன்று 15,243 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர், இதுதான் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ஒரே நாளில் அதிகபட்ச வெளியேற்றத்தைக் குறிக்கிறது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications