தங்கத்தில் முதலீடு என்றாலே நகையாகவோ அல்லது நாணயமாகவோ தான் வாங்கி வைக்க வேண்டும் என்பது கிடையாது . தங்கத்தில் முதலீடு செய்வதற்கு தற்போது பல வழிமுறைகள் வந்துவிட்டன. அதில் மிகவும் நம்பிக்கை வாய்ந்த தங்கம் சார்ந்த முதலீடாக கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கின்றன.
தங்கம் முதலீடு: 70,000 ரூபாய் , 1 லட்சம் என கொடுத்து தங்கம் வாங்க முடியாது இருந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணும் பலருக்கும் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் சிறந்த வாய்ப்பாக இருக்கின்றன. இதில் 70 ரூபாய் முதலே தங்கத்தில் முதலீடு செய்துவிட முடிகிறது. முதலில் Physical Gold மற்றும் Gold ETFக்களுக்கு இடையிலான வேறுபாட்டை தெரிந்து கொள்ளலாம்.

Physical Gold: தங்கத்தை நகையாகவும் நாணயமாகவும் வாங்கி வைப்பதை தான் இப்படி அழைக்கிறோம். பார்களாக வாங்கி வைப்பதும் இதில் அடங்கும். இந்த முறையில் தங்கத்தை நாம் விலை கொடுத்து வாங்கி வீட்டில் பத்திரப்படுத்தி கொள்ளலாம் அல்லது வங்கி லாக்கரில் வைத்து கொள்ளலாம். இன்றைய தினத்தில் 24 கேரட்டில் ஒரு கிராம் நாணயம் வாங்க வேண்டும் என்றாலே 10,000 ரூபாய் தேவை, அதுவே ஒரு சவரன் என்றால் 80,000 ரூபாய் தேவை. இத்துடன் ஜிஎஸ்டி, செய்கூலி வேறு செலுத்த வேண்டும்.
Gold ETF: இந்தியாவில் செபியால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டம் இது. மியூச்சுவல் ஃபண்டு போல செயல்படும். நிறுவனங்கள் பிசிக்கல் கோல்டு வாங்கி வைத்து விட்டு அதனை டிஜிட்டல் முறையில் Exchange traded funds முறையில் யூனிட்களாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்கின்றன. இந்த முறையில் ஒரு யூனிட்டை நாம் 60 முதல் 70 ரூபாய் முதலே வாங்க முடியும். இது செபி ஒழுங்குப்படுத்தப்பட்ட திட்டம் என்றால் நம் முதலுக்கு மோசம் இல்லை. தங்கம் விலை ஏற ஏற நாம் செய்த முதலீட்டின் மதிப்பும் ஏறும்.
நாடாளுமன்றத்தில் கேள்வி: இந்தியாவில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்யும் போக்கும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. தங்கம் விலை உயர்ந்து வரக்கூடிய இந்த சூழலில் நாடாளுமன்றத்திலும் தங்கம் தொடர்பான ஒரு முக்கியமான கேள்வி முன்வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் எம்பி ஒருவர், தங்கம் விலை இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை கடந்தது, மக்கள் தங்கத்தை நகையாகவும் வாங்குகிறார்கள் ஈடிஎஃப் போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்கிறார்கள். இந்த இரண்டிற்கும் தனித்தனி விலைகள் மற்றும் விதிமுறைகளை கொண்டு வருவதற்கு அரசு ஏதேனும் திட்டமிட்டு இருக்கிறதா, நகையாக அல்லது நாணயங்களாக தங்கத்தை வாங்குபவர்களுக்கு இந்த விலை ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் யோசனை இருக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார்.
தனித்தனி விலை விதிக்கப்படுமா?: அவருடைய இந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில் கோல்டு ஈடிஎஃப் என்பவை நேரடியாக பிசிகல் கோல்டுடன் தொடர்புடையவை. இந்தியாவில் செபியின் மியூச்சுவல் ஃபண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தான் கோல்ட் ஈடிஎஃப் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப்படுகின்றன. இந்த திட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் பிசிகல் கோல்டாக தங்கத்தை வாங்கி வைத்துக்கொண்டு அதனை எக்ஸ்சேஞ்ட் டிரேடட் கோல்டு டெரிவேட்டிவ்களாக பங்குச்சந்தையில் கொண்டு வருகின்றன என கூறியுள்ளார்.
அரசு விளக்கம்: கோல்டு ஈடிஎஃப்பின் மதிப்பு பிசிக்கல் கோல்டை சார்ந்து தான் இருக்கிறது எனவே இந்த இரண்டிற்கும் தனித்தனி விலை நிர்ணயம் செய்வது பொருந்தாது என பதில் அளித்துள்ளார். தங்கம் விலை உயரும் போது எப்படி நகை, நாணயத்தின் விலை உயர்கிறதோ அதை போலவே தான் கோல்டு ஈடிஎஃப்களின் மதிப்பு உயர்கிறது, இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை என விளக்கியுள்ளார்.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்



Click it and Unblock the Notifications