உலக அளவில் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடிய மக்கள் வசிக்கும் நாடு இந்தியா. இங்கே சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை கோடிக்கணக்கானவர்கள் ஒவ்வொரு நிமிடமும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் , பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட தளங்கள் மக்களின் அன்றாட பொழுதுபோக்கு ஊடகங்களாக மாறிவிட்டன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாக்டவுன் போடப்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர. அந்த சமயத்தில்தான் இந்தியாவில் இந்த சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலம் அடைய தொடங்கின. தற்போது பல்வேறு நபர்கள் தொழில் புரிவதற்கும் அன்றாட வேலைகளுக்குமே சமூக வலைத்தளங்களை முக்கியமான ஒரு ஊடகமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலைதள பயன்பாடு பல்வேறு சாதகங்களை கொண்டிருந்தாலும் அதற்கேற்ப பல்வேறு பாதகங்களையும் கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் அரங்கேறுகின்றன. இந்த சூழலில் தான் சமூக வலைதள பயன்பாட்டிற்கும் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை செய்திருக்கிறது. மத்திய உள்துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் சைபர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான நாடாளுமன்ற குழு ஒரு அறிக்கையை வழங்கி இருக்கிறது.
அந்த அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் சமூக வலைதள பயன்பாடுகளுக்கும் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி சமூக ஊடகங்கள் , டேட்டிங் செயலிகள் மற்றும் கேமிங் பிளாட்பார்ம்களை பயன்படுத்துவோரின் வயது மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறது. இதன் மூலம் யாரும் தவறான செயல்களில் ஈடுபடுவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்பதால் அதுபோன்ற நடவடிக்கைகள் குறையும் என பரிந்துரை செய்திருக்கிறது.
இதன் மூலம் போலியான புரோஃபைல்களை கண்டறியலாம் , சைபர் ஸ்டாக்கிங் , சைபர் கிரைம் உள்ளிட்டவற்றை கண்டறியலாம் ஆன்லைன் வழியாக பெண்களுக்கு தொந்தரவு தருபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட புரோஃபைல் மீது அடிக்கடி புகார்கள் வருகிறது எனும் போது இந்த சமூக ஊடகங்களை செயல்படுத்தக்கூடிய நிறுவனங்கள் மீண்டும் கேஒய்சி சரிபார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
டேட்டிங் மற்றும் கேமிங் செயலிகளை பயன்படுத்தும்போது அதற்கு உரிய வயதில் தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் அவர்களின் வயது சரி பார்ப்பதை கட்டாயம் என கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறது இந்த விதிமுறைகளை பின்பற்றாத சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
அடையாளத் திருட்டு, ஆன்லைன் தொந்தரவு , தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது உள்ளிட்டவற்றை தடுக்க இது அவசியம் என நாடாளுமன்ற குழு கேட்டுக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தளங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதாக மாற வேண்டும் என்றால் இந்த கேஒய்சி நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசு இந்த பரிந்துரை ஏற்று சட்டமாக்கினால் அனைத்து புரோபைல்களுக்கும் கேஒய்சி கட்டாயமாக்கப்படும்.


Click it and Unblock the Notifications