யெஸ் பேங்கின் பிரச்சனைகள் பற்றி நாம் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் அந்தளவுக்கு எந்த டிவி, செய்தித்தாள் என அனைத்திலும் இதை பற்றிய செய்தி தான்.
ஆர்பிஐ கட்டுப்பாடு முதல் எஸ்பிஐ பங்கு வாங்குவது முதல் கொண்டு பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ஆனால் தற்போது தான் யெஸ் பேங்கில் நடந்த ஒவ்வொரு பிரச்சனையும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
பத்திரங்களில் முதலீடு
கடந்த ஞாயிற்றுகிழமையன்று வெளியான அறிக்கையில் இந்தியாபுல்ஸூக்கு யெஸ் பேங்க் 662 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி யெஸ் பேங்க் ஒரு வங்கி, அப்படி இருக்கையில் ஒரு ஹவுஸிங் பைனான்ஸிடம் எதற்கு கடன் வாங்கியுள்ளது என யோசிப்பது புரிகிறது. யெஸ் பேங்கில் அடுக்கு -1 (AT-1) பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கடன் நிலுவை எதுவும் இல்லை
இது பங்கு சந்தைக்கு அளித்த தாக்கல் ஒன்றில் இந்தியா புல்ஸ் தனது முதலீட்டில் ஒரு வகையில் 2017ம் ஆண்டு கருவூல மேலாண்மை திட்டத்தின் மூலம் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் யெஸ் பேங்கில் இருந்து எந்தவொரு கடன்களும் நிலுவையில் இல்லை என்றும் தெளிபடுத்தியுள்ளது.
மற்றவர்களுக்கும் எந்த பாக்கியும் இல்லை
அதே போல இந்தியா புல்ஸின் புரோமோட்டர் நிறுவனமான சமீர் கெஹ்லாட் அல்லது இந்திய புல்ஸ் சார்ந்த எந்தவொரு நிறுவனமும் யெஸ் பேங்கில் எந்தவொரு நிலுவையும் வைக்கவில்லை என தெரிவித்துள்ளது. இந்தியா புல்ஸின் இந்த அறிக்கையானது யெஸ் பேங்கின் நிறுவனர் ரானா கபூர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வந்துள்ளது. அதிலும் டி.ஹெச்.எஃப்.எல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணமோசடி தொடர்பாக வெளியான அறிக்கைக்கு பின்பு இது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐயின் கிடுக்குப்பிடி
வரும் ஏப்ரல் 3 வரை ஆர்பிஐ கட்டுபாட்டின் கீழ் உள்ள இந்த வங்கி, இந்த காலகட்டத்தில் 50,000 மேல் பெற அனுமதிக்கப்படமாட்டார்கள். அவரச தேவைக்கும் மட்டும் அனுமதியுடன் அதிகமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐயின் முன்னாள் நிர்வாகியான பிரசாந்த் குமாரை தற்போது யெஸ் பேங்க் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுபடியும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அடுத்தடுத்த விசாரணையில் தான் தெரியும்
மேலும் யெஸ் பேங்கினை புனரமைக்கும் பொருட்டு போதிய திட்டங்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ள நிலையில், தற்போது எஸ்பிஐ முதல்கட்டமாக 2,450 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்தியா புல்ஸ் போன்ற இன்னும் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனவோ தெரியவில்லை. ரானா கபூர் தற்போது தீவிர விசாரனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இனி தான் தெரியவரும்.


Click it and Unblock the Notifications