உலகளாவிய நிதிச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பிளாக்ராக் (BlackRock) நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு, பெரும் மோசடிக்கு உள்ளாகியுள்ளது. 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.4,170 கோடி) அதிகமாக நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், உலக தனியார் கடன் துறையை உலுக்கியுள்ளது. இந்தத் திகைப்பூட்டும் மோசடிக்கு இந்தியத் தொழிலதிபர் பங்கிம் பிரம்மபட் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அவரது நிறுவனமான கேரியாக்ஸ் கேபிடல் (Carriox Capital) மூலம் போலி சொத்துக்களை வைத்து பல கோடி டாலர்களை கடனாகப் பெற்றதே இந்த மோசடிக்கு முக்கிய காரணம்.
போலி மின்னஞ்சல்கள், போலிக் கடன்கள் : பிரம்மபட் தலைமையிலான கேரியாக்ஸ் கேபிடல், உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான டி-மொபைல், டெல்ஸ்ட்ரா, மற்றும் டெலிகாம் இத்தாலியா ஸ்பார்கிள் ஆகியவற்றுக்கு வர வேண்டிய பணத்தை (Receivables) நிதியுதவி செய்ததாக கூறி, அதை சட்டப்பூர்வமான பிணையாகக் காட்டி கடன் பெற்றுள்ளது. இருப்பினும், இதுதொடர்பான தீவிர விசாரணையில், இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதாரமாக காட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் விலைப்பட்டியல்கள் முழுவதுமே புனையப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது.

இந்த மோசடியை நம்பகத்தன்மையுடன் காட்டுவதற்காக, பிரம்மபட் மற்றும் அவரது குழுவினர் தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அவர்கள் தொலைத்தொடர்பு ஜாம்பவான்களின் மின்னஞ்சல்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி மின்னஞ்சல் டொமைன்களை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், கடன் வழங்குநர்களுக்கு மோசடியான உறுதிப்படுத்தல் கடிதங்களை அனுப்பி, பிளாக்ராக் மற்றும் பிஎன்பி பரிபாஸ் (BNP Paribas) போன்ற உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான டாலர்களைக் கடனாக பெற்றுள்ளனர்.
சந்தேகம் வலுத்ததால் சதித்திட்டம் அம்பலம் : கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே பிளாக்ராக்-க்கு சொந்தமான எச்.பி.எஸ் (HPS) என்ற கடன் பிரிவு பிரம்மபட்டின் நிறுவனங்களுக்கு கடன் வழங்க தொடங்கியது. கடந்த 2024 ஆகஸ்டில் கிட்டத்தட்ட 430 மில்லியன் டாலர் வரை கடன் அளவு உயர்த்தப்பட்டது. கடன்களின் 50 சதவீதத்தை பிஎன்பி பரிபாஸ் நிதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கடன்கள் பல ஆண்டுகளாகப் போலியான பணம் செலுத்துதல் மற்றும் வட்ட வடிவிலான பரிவர்த்தனைகள் மூலம் செலுத்தப்பட்டு வந்ததால், மோசடி மறைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில், எச்.பி.எஸ் (HPS) ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கான சில மின்னஞ்சல் முகவரிகளில் சீரற்ற தன்மைகளை கண்டறிந்தபோது சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. இதனையடுத்து, கடன் வழங்குநர்கள் முழுமையான விசாரணையைத் தொடங்கினர்.
தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், போலியான டொமைன்களில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் கண்டறியப்பட்டன. போலியான வரவுகளை இனி சமாளிக்க முடியாமல் போன நிலையில், கேரியாக்ஸ் கேபிடல் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகஸ்ட் 2025-இல் திவால் அறிவிப்பை வெளியிட்டன.
இதன்பிறகு, பிரம்மபட்டும் தனிப்பட்ட முறையில் திவால் ஆவதாக அறிவித்து, ஒட்டுமொத்த நடவடிக்கையையும் முடக்கியுள்ளார். இந்த மோசடி தொடர்பாக பிளாக்ராக் உள்ளிட்ட கடன் வழங்குநர்கள் தற்போது பிரம்மபட் மீது வழக்கு தொடர்ந்து, ரூ.500 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை திரும்பப் பெற முயற்சி எடுத்து வருகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications