துபாய்: 61 வயதுதான் ஆகிறது இந்தியாவை சேர்ந்த அந்த தொழிலதிபருக்கு. வெளிநாட்டுக்கு சென்று விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தார். அதுவும் முதல் முறையாக. ஆனால் அவரது வாழ்க்கையில், விதி விளையாடிவிட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமண சமூகத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் அடங்கிய குழு விடுமுறையை அனுபவிக்க ஜனவரி 2ம் தேதி, துபாய் சென்று சேர்ந்தது.
அதில், பஞ்சாபை சேர்ந்த நெம் சந்த் ஜெயின் மற்றும் அவரது மனைவி ரோஸி ஆகியோரும் இருந்தனர். இந்த குழுவினர், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டலின் குளத்தில் தொழிலதிபர் நெம் சந்த் ஜெயின் நீந்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
நீச்சல் குளம்
"அவர் சோர்வாகவும் சங்கடமாகவும் உணர்ந்ததாகக் கூறி குளத்திலிருந்து வெளியே வந்தார். எனவே, அறைக்குச் சென்று தேநீர் அருந்துமாறு அவரது மனைவி வற்புறுத்தினார். ஆனால் அவரால் மேலே செல்ல முடியவில்லை. படிக்கட்டுகளை சென்றடைவதற்கு முன்பு அவர் சரிந்து விழுந்தார், " என்று பயண அமைப்பாளர் சுனில் ஜெயின் கூறுகிறார்.
அவசர சிகிச்சை
ஆம்.. இதுதான் நடந்தது. உடனடியாக, நீச்சல் குளத்தில் இருந்த அவசர பாதுகாவலர் சிபிஆர் சிகிச்சையளித்துள்ளார். சிபிஆர் எனப்படும் இந்த சிகிச்சை அவசரகால பாதுகாப்பு வழிமுறையாகும். இது ஒருவரின் சுவாசம் அல்லது இதய துடிப்பு நிற்கும் சூழ்நிலை ஏற்படும்போது செய்யப்படும்.
ஆம்புலன்ஸ்
மின்சார ஷாக், மாரடைப்பு அல்லது நீரில் மூழ்கியவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை கொடுக்கப்படும். ஆம்புலன்சும் 10-15 நிமிடங்களில் நீச்சல் குளத்தை அடைந்தது. ஆனால் நெம் சந்த்தை காப்பாற்ற முயன்றாலும் அவர்களால் முடியவில்லை.
விமானம்
நெம் சந்த்துக்கு இதுதான் முதலாவது வெளிநாட்டு பயணம். இன்று அவருக்கு 62வது பிறந்த தினமாகும். ஆனால் சம்பவம் நடந்தது, ஞாயிற்றுக்கிழமை என கூறப்படுகிறது. இந்தியாவுக்கு திரும்ப புக் செய்திருந்த விமானத்திலேயே, அவரது உடல், இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications