நிறுவனங்களில் பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறுவது வழக்கமான நிகழ்வுதான். இது நிறுவனத்தின நடவடிக்கைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படாது. அதேசமயம் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்வது நிறுவன அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டில் சர்வதேச அளவில் சுமார் 1,425 சி.இ.ஓ.க்கள் தங்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இந்திய நிறுவனங்களிலும் அந்த போக்கு பிரதிபலிக்கிறது. ப்ரைம்இன்போபேஸ் டாட் காம் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2023ம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் (ஜனவரி-அக்டோபர்) தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இருந்து 110 நிர்வாக இயக்குனர்கள் அல்லது தலைமை நிர்வாகிகள் விலகியுள்ளனர்.

2022ம் ஆண்டில் அக்டோபர் வரையிலான 10 மாதங்களிலும் பதவி விலகிய தலைமை நிர்வாகிகள் எண்ணிக்கையும் இதே அளவுக்குதான் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் கடந்த இரண்டுகளில் முதல் 10 மாதங்களில் அதிகளவில் நிறுவன தலைமை நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர்.
2014ல் முதல் 10 மாதங்களில் 65 தலைமை நிர்வாகிகள் அல்லது நிர்வாக இயக்குனர்கள் மட்டுமே பதவியை துறந்து விட்டு சென்றனர். அந்த முழு காலண்டர் ஆண்டில் 79 பேர் தான் வேலையை வேண்டாம் என்று சென்று இருந்தனர்.
அதிக எதிர்பார்ப்புகள், உயர்ந்த பதவியில் குறைவான செயல்திறனுக்கான சகிப்புத்தன்மை குறைதல், பெரிய சிக்கலான மற்றும் சவாலான வணிக சூழல் இடையூறுகள் மற்றும் சிறந்த திறமையாளர்களுக்கான போட்டி போன்றவைதான் தலைமை நிர்வாகிகள் பதவி விலகலுக்கான காரணம் என்று நிறுவன இயக்குனர்கள் குழு உறுப்பினர்கள், கார்ப்பரேட் நிர்வாக ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் பணியமர்த்தல் நிபுணர்கள் சொல்கின்றனர்.
கொரோனா தொற்றுநோய் காலத்தில், எதிர்காலம் குறித்த பயம் இருந்தது. இதனால் அப்போது இருக்கிற வேலையை தக்கவைத்துக் கொள்வோம் என்று அமைதியாக இருந்தார்கள். இதனால் அந்த நேரத்தில் வேலையை விட்டு வெளியேறும் விகிதம் குறைவாக இருந்தது.
ஆனால் தொற்றுநோய் காலத்துக்கு பிறகு மீண்டும் வேலையை விட்டு வெளியேறுவது அதிகரித்தது. அதேசமயம் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் ஒரு பெரிய மலர்ச்சியும் இருந்தது, இது உயர் மட்டத்தில் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த ஆண்டில் நுகர்வோ விருப்பத் துறையில்தான் அதிகளவில் தலைமை நிர்வாகிகள் வேலை வேண்டாம் என்று சென்றுள்ளனர்.
இந்த துறையில் 24 தலைமை நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அடுத்தப்படியாக நிதி சேவைகள் துறையில் 20 தலைமை நிர்வாகிகள் பதவி விலகி உள்ளனர். மூன்றாவது இடத்தில் தொழில்துறை உள்ளது, இந்த துறையில் 19 சி.இ.ஓ.க்கள் வேலையை ராஜினாமா செய்தனர்


Click it and Unblock the Notifications