சர்வதேச அளவில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுகிறது. எனவே தான் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைகிறது.
வரலாற்று ரீதியாகவே ஒரு நாடும் ஒரு மன்னரும் தங்களின் செல்வ வலிமையை தங்கத்தை கொண்டே வெளிப்படுத்தினர். தனி நபர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் கூட இதற்காகத்தான் பெரிய அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வைக்கின்றன. அந்த வகையில் உலக அளவில் யார் வசம் அதிக அளவு தங்கம் இருக்கிறது என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம் .

உலக தங்க கவுன்சில் வெளியிடும் தகவலின் படி சர்வதேச அளவில் இதுவரை 2 ,16,265 டன்கள் தங்கம் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. 2024 டிசம்பர் மாத நிலவரப்படி பார்க்கும்போது உலகிலேயே அதிக அளவு தங்க இருப்பை வைத்திருக்கும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்கா வசம் 8,134 டன் தங்கம் இருக்கிறது. இதற்கு அடுத்ததாக ஜெர்மனி இருக்கிறது. சீனா 2280 டன்கள் தங்கமும், இந்தியா 876 டன்கள் தங்கமும் கொண்டிருப்பதாக உலக தங்க கவுன்சில் வெளியிடும் தகவல் குறிப்பிடுகிறது.
உலக அளவில் இந்தியாவை சேர்ந்த குடும்பங்கள்தான் அதிக அளவு தங்கத்தை சேமித்து வைத்திருக்கின்றன. இந்திய குடும்பங்கள் வசம் 24 ,000 டன் தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே வேலையில் சீனாவை சேர்ந்த குடும்பங்கள் 20,000 டன் தங்கத்தை வைத்திருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அடுத்தபடியாக அதிக அளவு தங்கம் வைத்திருக்கக் கூடிய குடும்பமாக சவுதி அரேபியாவின் அரசு குடும்பம் இருக்கிறது. 15000 உறுப்பினர்களை கொண்டிருக்கும் சவுதி அரசு குடும்பத்தின் மொத்த சொத்து 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், இதில் கணிசமான அளவு தங்க முதலீடாகவும் இருக்கிறது. அதிக அளவில் தங்கம் வைத்திருக்கும் தனி நபர்கள் என பார்க்கும்போது ஜான் பால்சன் என்ற அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர் தான் உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் தனிநபராக பார்க்கப்படுகிறார்.
இவர் அண்மையில் கூட தங்கத்தின் விலை பல மடங்கு உயரும் டாலரின் மதிப்பு சரிவடையும் எனக் கூறியிருந்தார். அவருடைய கணிப்பின்படியே தற்போது செல்கிறது. கனடா நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரனான லிரிக்ஸ் பிராட் உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் இரண்டாவது நபராக பார்க்கப்படுகிறார். 1.1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட இவர் தனது 90% முதலீட்டை தங்கள் மற்றும் வெள்ளியில் தான் செய்திருக்கிறார்.
மற்றொரு பெரும் பணக்காரரான ஜார்ஜ் சோரோஸ் 264 மில்லியன் டாலர்களை தங்க இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே கணித்த ரே டாலியோ தன்னுடைய போர்ட்போலியோவில் பெரும் பகுதியை தங்கத்திற்காகவே ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
அதிகளவு தங்கத்தை வைத்திருக்கும் இந்த முதலீட்டாளர்கள் யாருமே தங்கத்தை நகையாகவோ தங்க கட்டிகளாகவோ வாங்கி வைக்கவில்லை அதற்கு பதிலாக இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்து அதில் கணிசமான லாபத்தை பார்த்திருக்கின்றனர். உலகளவில் செயல்பாட்டில் இருக்கக்கூடிய இடிஎப் திட்டங்களின் கீழ் 3,445 டன்கள் தங்கம் கையிருப்பாக இருக்கிறது.
More From GoodReturns

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications