2025 ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆண்டு. ஏனெனில் இந்தியர்களின் வாழ்வோடு கலந்து இருக்கக்கூடிய தங்கத்தின் விலை இந்த ஆண்டில் பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்தது.
ஒரு பவுன் தங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என மக்கள் கலக்கமடைந்தனர், ஆனால் அதற்காக அவர்கள் தங்கத்தை வாங்குவதை நிறுத்தவே இல்லை. மக்கள் தங்கள் கைவசம் இருந்த பணத்தை தங்கத்தில் தான் வாரி இறைத்துள்ளனர். ஆனால் இந்தியர்கள் இந்த முறை தங்கத்தை நகையாக வாங்கவில்லை. ஆம் இந்தியர்கள் தங்கத்தை நகையாக வாங்காமல் அதை ஒரு முதலீடாக பார்க்கும் போக்கு அதிகரித்து இருக்கிறது.

எனவே பெரும்பாலான மக்கள் தங்க நகையை வாங்காமல் தங்கள் கைவசம் இருந்த பணத்தை கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவாக டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிகமான பணம் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. உலக தங்க கவுன்சில் தகவலின் படி இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் மட்டும் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் 1.25 மில்லியன் டாலர்கள் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
நவம்பர் மாதத்தில் வெறும் 379 மில்லியன் ஆக தான் இருந்தது ஒரே மாதத்தில் கோல்ட் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடுகளின் மதிப்பு 231% உயர்வு கண்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமாக கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடுகள் வந்தன. அதன் பிறகு குறைந்து வந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் உயர்ந்தது. நவம்பர் மாதம் குறைந்த முதலீடுகள் டிசம்பரில் வரலாற்று உச்சத்தை எட்டி இருக்கிறது.
இதுவரை இந்திய சந்தையில் ஒரே மாதத்தில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் 1.25 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதே டிசம்பர் மாதத்தில் தான் தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்றால் தங்கம் விலை உயர்ந்தால் மக்கள் வாங்க மாட்டார்கள் என அர்த்தம் இல்லை. மாற்று வழிகளில் அதிக லாபம் தரும் வழிகளில் வாங்குகிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது.
டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் அதிகபட்சமாக 6.07 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 1.25 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. மூன்றாவது சீனா நான்காவது இடத்தில் பிரிட்டன் ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 பில்லியன் டாலர்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு முழுவதும் 4.68 பில்லியன் டாலர்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடாக வந்து குவிந்திருக்கின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பல மடங்கு அதிகமாகும். தங்கம் விலை உயர உயர பொதுமக்கள் அதனை ஒரு முதலீடாக பார்க்க தொடங்கியதும் நகையாக வாங்கும் போது செய்கூலி, சேதாரத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால் ஈடிஎப் திட்டங்களை அதற்கு மாற்றாக கருதி முதலீடு செய்ய தொடங்கி இருப்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!



Click it and Unblock the Notifications