சென்னை: மத்திய அரசு பெரும் கனவுடன் அறிமுகம் செய்த தங்கப் பத்திரங்களை (Sovereign Gold Bonds) இனி விற்பனை செய்யாது என்று அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாக சிஎன்பிசி-டிவி18 தெரிவித்துள்ளது. இது 'அதிக செலவு மற்றும் சிக்கலான' முதலீட்டு கருவி என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தி நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தங்கப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்பம் முதல் தங்க பத்திரங்கள் மீது பல விமர்சனங்கள் இருந்த வேளையில் மக்கள் மெல்ல மெல்ல இதில் முதலீடு செய்ய துவங்கினர்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மத்திய அரசின் சார்பில் வெளியிட்ட SGB-யின் 67 தவணைகளில் முதலீட்டாளர்கள் ரூ. 72,274 கோடி முதலீடு செய்தனர். அவற்றில் நான்கு பத்திரங்கள் 5 வருட முதிர்வு காலம் முழுமையாக முடிந்து முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. அதாவது பத்திரங்களை வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
2015 மற்றும் 2017 க்கு இடையில் வெளியிடப்பட்ட முதல் நான்கு தங்க முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்யவர்களுக்கு, அரசு திருப்பிச் செலுத்தப்படும் பணம் முதலீட்டை காட்டிலும் இரட்டிப்பாகியுள்ளது என சந்தை ஆய்வுகள் கூறுகிறது. ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது மூலம் அரசுக்கு சுமை குறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய பட்ஜெட் ஆவணங்களின் மத்திய அரசு, இந்த தங்க முதலீட்டு பத்திர முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.85,000 கோடி மதிப்பிலான கடன்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கடன் சுமை மார்ச் 2020 இறுதியில் வெறும் ரூ.10,000 கோடி அளவில் மட்டுமே இருந்து சுமார் ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளதாக காட்டுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகளவில் உயர்ந்து வரும் காரணத்தால் தங்கம் முதலீட்டு பத்திரம் அரசுக்கு சுமையாக மாறியுள்ளது, எனவே அரசு தங்க பத்திரத்தை இனி வெளியிடாது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தங்க பத்திரம் இரண்டாம் நிலை சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படும் காரணத்தால் முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி விலையை காட்டிலும் 8 சதவீதம் அதிகமான தொகை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications