உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் சுமார் 120 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செலவில் நடந்து வரும் வேளையில், அடுத்த 5 வருடம் யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஜீரோ சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சியை பிடித்தால் 3 அரசு நிறுவன பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு நாட்டின் பொது காப்பீட்டு நிறுவனங்களான இந்திய பொது காப்பீட்டு நிறுவனம் (General Insurance Corporation of India - GIC) மற்றும் லைப் இன்சூரன்ஸ் காப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), ஹிந்துஸ்தான் ஜிங்க் ஆகியவற்றில் அரசு கையிருப்பில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய இந்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
முதலீட்டாளர்களின் ஆர்வத்தை மதிப்பீடு செய்த பின்னர், 2024/25 நிதிய ஆண்டில் இந்த பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என அரசு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (GIC):
GIC நிறுவனத்தில் 10% பங்குகளை படிப்படியாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 5700 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கு விற்பனை நடப்பு நிதியாண்டில் நடக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆறு மாதங்களில் GIC பங்குகளின் மதிப்பு 45% அதிகரித்துள்ளது.
Life Insurance Corporation of India (LIC):
LIC நிறுவனத்தின் பங்குகளை பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டில் ஐபிஓ-வின் போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அரசு தொடர்ந்து பின்பற்ற திட்டமிட்டுள்ளது. அதாவது, ஏழு ஆண்டுகளில் 10% பங்குகளையும், பத்து ஆண்டுகளில் 25% பங்குகளையும் படிப்படியாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தையும், LIC பங்குகளின் சந்தை மதிப்பையும் கருத்தில் கொண்டு, "சிறிய அளவிலான" தவணைகளில் பங்குகள் விற்பனை செய்யப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC பங்குகள் கடந்த ஆறு மாதங்களில் 58% அதிகரித்துள்ளன. வெள்ளிக்கிழமை அன்று ஒரு பங்கு 973 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
LIC ஐபிஓ-வின் போது, மத்திய அரசு இந்நிறுவனத்தில் 3.5% பங்குகளை விற்பனை செய்தது. இன்டெக்ஸ் பண்டில் LIC-ஐ சேர்க்க, கூடுதலாக 1.5% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில், 1.5% பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், அரசு சுமார் 9200 கோடி ரூபாய் வரை திரட்ட முடியும்.
ஹிந்துஸ்தான் ஜிங்க்:
ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்தில் அரசு வைத்திருக்கும் பங்குகளை விற்பனை செய்ய (Offer-for-Sale - OFS) மூன்று மாதங்களில் அறிவிப்பு வெளியாகலாம் என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், "ஹிந்துஸ்தான் ஜிங்கில் அரசின் பங்குகளை விற்பனை செய்வது நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தையில் இருந்தது. கடந்த ஆண்டே இது செய்யப்பட இருந்தது, ஆனால் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அரசு திட்டமிட்டது. இந்த முடிவு இப்போது கைவிட அரசு முடிவு செய்த நிலையில் பங்குகளை விற்பனை செய்வதே சிறந்த தீர்வு என நாங்கள் கருதுகிறோம்" என்று அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்டத்தை முன்வைத்தது. இதன் மூலம், ஜிங்க் மற்றும் லெட், வெள்ளி மற்றும் அதன் மறுசுழற்சி வணிகம் என மூன்று வெவ்வேறு துணை நிறுவனங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜிங்க் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்கில், வேதாந்தா நிறுவனம் 64.92% பங்குகளை வைத்திருக்கிறது. மீதமுள்ள 29.54% பங்குகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
எனவே, நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு அரசின் ஒப்புதல் அவசியம். இதன் காரணமாகவே, மறுசீரமைப்பு திட்டம் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டுவதே சிறந்த வழி என அரசும், நிறுவன நிர்வாகமும் முடிவு செய்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் ஹிந்துஸ்தான் ஜிங்கில் அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications