இந்திய அரசின் அடுத்த மூவ்.. இனி தங்கம், பாமாயில் விலை அதிகரிக்கலாம்.. !

இந்திய அரசு தங்கம் மற்றும் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கான அடிப்படை இறக்குமதி விலையை அதிகரித்துள்ளது.

இது சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை, கச்சா எண்ணெய் விலை, பாமாயில் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசு இப்படி அதிகரிப்பினை செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த விலை அதிகரிப்பினால் சில்லறை வர்த்தகத்தில் இவற்றின் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மக்கள் மத்தியில் மேற்கொண்டு செலவினை அதிகரிக்கலாம். மொத்தத்தில் இனி சாமானியர்களின் பாக்கெட் காலியாவது உறுதி.

இறக்குமதி அதிகம் செய்யும் நாடு

இறக்குமதி அதிகம் செய்யும் நாடு

இந்தியா பொதுவாக இறக்குமதியினை அதிகம் சார்ந்துள்ள நாடு எனலாம். குறிப்பாக அடிப்படை தேவையாக இருக்கும் எரிபொருளை முக்கால்வாசிக்கும் அதிகமாக இறக்குமதியே செய்கிறது. இது தவிர சமையலுக்கு பயன்படும் சமையல் எண்ணெய்-யையும் அதிகளவில் இறக்குமதி செய்கின்றது. இது தவிர சர்வதேச அளவில் தங்கத்தினை சீனாவுக்கு அடுத்தப்படியாக பயன்படுத்தும் நாடு இந்தியா தான்.

விலையை அதிகரிக்கலாம்

விலையை அதிகரிக்கலாம்

ஆக அரசின் இந்த விலை அதிகரிப்பானது மேற்கொண்டு சில்லறை விலையினை ஊக்குவிக்கலாம். இது பணவீக்கத்தினையும் தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல தங்கம், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் உள்பட பல கமாடிட்டிகளின் அடிப்படை விலையையும் உயர்த்தியுள்ளது.

அடிப்படை விலை  அதிகரிப்பு

அடிப்படை விலை அதிகரிப்பு

மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை என பலவற்றின் அடிப்படை விலைகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படலாம். இந்த அடிப்படை விலையை பொறுத்து தான் அரசு வரியை கணக்கீடு செய்கின்றது. இதனால் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதல் வரியினை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

எவ்வளவு திருத்தம்?

எவ்வளவு திருத்தம்?

இந்தியா சுத்திகரிக்கப்பட்ட எண்னெய் மற்றும் வெள்ளியினை அதிகளவில் இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாகும். அது மட்டும் அல்ல தங்கத்தினை அதிகளவில் இறக்குமதி செய்யும் ஒரு நாடாகும்.

கச்சா பாமாயில் விலையானது ஒரு மெட்ரிக் டன்னுக்கு 960 டாலர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே பாமாயில் விலை மெட்ரிக் டன்னுக்கு 974 டாலர்களாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கச்சா சோயா பீன் எண்ணெய் ஓரு மெட்ரிக் டன்னுக்கு 1354 டாலர்களாகவும், பித்தளை ஸ்கிராப் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்க, 4545 டாலராகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நுகர்வு சரியலாம்

நுகர்வு சரியலாம்

இந்த விலை அதிகரிப்பானது ஒரு புறம் பணவீக்கத்தினை தூண்டினாலும் மறுபுறம் நுகர்வினையும் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி நுகர்வில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் மறுபுறம் அடிப்படை தேவைகளான பாமாயில், கச்சா பாமாயிலின் விலை அதிகரிப்பால் எரிபொருள் விலையும், சமையல் எண்ணெய் விலையும் அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு விலை அதிகரிப்பினை தூண்டலாம்.

பணவீக்கத்தினை தூண்டலாம்

பணவீக்கத்தினை தூண்டலாம்

இது அத்தியாவசிய தேவையாக இருப்பதால் விலை அதிகமாக இருந்தாலும், வாங்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சமையல் எண்ணெய் விலையானது அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது அடிப்படை விலையும் அதிகரித்துள்ள நிலையில் இது மேற்கொண்டு விலை அதிகரிப்பினை தூண்டலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+