இந்திய அரசு தங்கம் மற்றும் சில சமையல் எண்ணெய்-களின் அடிப்படை இறக்குமதி விலையை குறைத்துள்ளது.
ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு தங்கம் மற்றும் சமையல் எண்ணெய்கள், வெள்ளி ஆகியவற்றின் அடிப்படை விலைகளை திருத்துகிறது.
இதன் விலைகள் வரியை ஒரு இறக்குமதியாளர் வரியை செலுத்த வேண்டிய அளவினை கண்க்கிட பயன்படுத்தப்படுகிறது.
முக்கிய இறக்குமதிகள்
இந்தியா தங்கம் மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு தங்கம் இறக்குமதியினை குறைக்கும் பொருட்டு வரியை அதிகரித்திருந்தாலும், அது பெரியளவில் கைகொடுத்ததாகவும் தெரியவில்லை.
எனினும் சமையல் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் எண்ணெய் அடிப்படை தேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதன் இறக்குமதி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
சப்ளையில் பாதிப்பு
சமீபத்திய காலமாக கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம், அதன் பிறகு ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால் இறக்குமதியில் பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் சமையல் எண்ணெய் இறக்குமதியானது பெரிதும் குறைந்தது. இதன் காரணமாக விலையானது விண்னைத் தொடும் அளவுக்கு உச்சம் தொட்டது.
அடிப்படை இறக்குமதி விலை குறைப்பு
தற்போது சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவடைந்து வரும் நிலையில், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் அரசின் இந்த விலை குறைப்பானது மேலும் விலை குறைய வழிவகுக்கலாம்.
கடந்த ஜூலை மாதம் தங்கம் இறக்குமதி வரியினை, 7.5%-ல் இருந்து, 12.5% ஆக அதிகரித்தது நினைவுக்கூறத்தக்கது.
ரூ.1500 சரிவு
இது சர்வதேச அளவில் தங்கம் விலையானது குறைந்து வரும் சூழலில், இந்திய அரசும் அடிப்படை விலையினை குறைத்துள்ளது. இதனால் 10 கிராமுக்கு 49,231 ரூபாயாக உள்ளது. ஒரு வாரத்தில் இதுவரையில் மட்டும் சுமார் 1500 ரூபாய் குறைந்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1664.48 டாலரினை தொட்டுள்ளது. இந்த வாரம் மட்டும் இதுவரையில் 3% குறைந்துள்ளது.
மத்திய அரசின் முடிவு ஏன்?
மத்திய அரசின் இந்த முடிவானது நெருங்கி வரும் பண்டிகை காலத்தில் தங்கம் மற்றும் சமையல் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண காலகட்டத்தினை விட விழாக்கால பருவத்தில் தேவை அதிகரிக்கும் என்பதால், அரசின் இந்த முடிவினால் விலை குறையலாம். இது பணவீக்கத்தினையும் கடடுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!



Click it and Unblock the Notifications