சென்னை: இந்தியர்களுக்கும் தங்கத்துக்கும் இடையிலான உறவு என்பது பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் தங்கம் என்பது நம்முடைய கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு விஷயமாக இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக கை மாறி வரும் ஒரு சொத்தாகவும் தங்கம் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எவ்வளவு தங்கம் இருக்கிறது அதன் மொத்த மதிப்பு என்ன என்பது குறித்து உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய குடும்பங்கள் மற்றும் கோயில்களில் இருக்கக்கூடிய மொத்த தங்கத்தின் அளவு 25 ஆயிரம் டன்கள் என உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது. 25 ஆயிரம் டன்கள் தங்கம் என்பது இன்றைய சந்தை நிலவரத்தை பார்க்கும் போது 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இது இந்தியா 2026 ஆம் நிதி ஆண்டில் எட்டுவதாக கணிக்கப்பட்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 56 சதவீதம் ஆகும் . இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் பாகிஸ்தானின் மொத்த பொருளாதாரமே 411 பில்லியன் டாலர்கள் தான். ஆனால் இந்தியர்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விட ஆறு மடங்கு அதிகம் .இந்தியர்கள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு பல்வேறு வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை விட அதிகமாக இருக்கிற.து உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் இத்தாலியின் ஜிடிபி 2.4 டிரில்லியன் டாலர்கள் தான் அதேபோல கனடாவின் ஜிடிபி 2.33 டிரில்லியன் டாலர்கள், ஆனால் அதைவிட அதிகமாக இந்தியர்கள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு இருக்கிறது.
2020 ஆம் நிதி ஆண்டிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியர்கள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மொத்த மதிப்பு பல டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என என நிபுணர்கள் கூறுகின்றனர். வர்த்தக மோதல்கள், போர், பணவீக்கம் உள்ளிடவை காரணமாக தங்கத்தின் விலையும் தங்கத்தின் தேவையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தங்கத்தின் விலை தற்போது உயர்ந்த வண்ணமே இருப்பதால் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் சற்றே குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக யூபிஎஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. ஏனெனில் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதன் காரணமாக மக்களிடையே தங்கத்தை வாங்குவதற்கான சக்தி குறைந்திருக்கிறது. எனவே இந்தியாவில் 2026 ஆம் நிதி ஆண்டில் மக்கள் தங்கத்தை வாங்கும் போக்கு சற்றே குறைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
அதாவது தங்கத்திற்கான டிமாண்ட் என்பது 782 டன்களாக இருப்பதாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையை கூறுகிறது . நகையாக வாங்கும் போக்கு குறைந்து இருப்பதாகவும் தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களை வாங்குவது 25% அதிகரித்து இருப்பதாகவும் இந்த வங்கி வெளியிட்டு இருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது . இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 725 டன்களாக குறையும் என தெரிவித்து இருக்கிறது.
More From GoodReturns

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!



Click it and Unblock the Notifications