உலகிலேயே புத்திசாலித்தனமான நிதி மேலாளர்கள் நம் இந்திய இல்லத்தரசிகள் தான். இந்திய பெண்கள் தங்கத்தின் மீது செய்யும் முதலீடுகளே இதற்கு காரணம்.
சந்தை மூலதன அடிப்படையில் உலகின் மிகப்பெரிய வங்கியாக இருக்கிறது ஜேபி மார்கன் அண்ட் லிமிடெட். இந்த வங்கியை நிறுவியவர் தான் பியர் பாண்ட் மார்கன். அவர் ஒருமுறை கூறிய வார்த்தைகள் இவை "தங்கம் தான் பணம் மற்ற அனைத்துமே கடன் தான்". அவர் கூறிய இந்த வாக்கியம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ இந்தியாவை சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு மிகவும் தெளிவாக புரிந்திருக்கிறது. ஏனெனில் பெண்கள் சேமிப்பு முதலீடு என்ற உடன் தங்கத்தை தான் முதலில் தேர்வு செய்வார்கள்.

இதனை பாராட்டி அண்மையில் கூட உதய் கோடக் அவர்கள் உலகிலேயே மிகவும் திறமையான நிதி மேலாளர்கள் என்றால் அது இந்திய இல்லத்தரசிகள் தான் என தன்னுடைய எல்ஸ் பக்கத்தில் இந்திய பெண்களின் தங்க சேமிப்பு குறித்து மிகப் பெருமையாக பதிவு செய்திருந்தார். இந்திய இல்லத்தரசிகளின் தங்க நகை சேமிப்பு பழக்கம் தான் இந்தியாவின் பொருளாதார நிலை தன்மைக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது.
இதனை உண்மை என நிரூபிக்கும் வகையிலான தரவுகளும் தற்போது வெளியாகி இருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவை சேர்ந்த குடும்பங்கள் 12000 டன்கள் தங்கத்தை வாங்கி இருக்கின்றன. இதில் 8,696 டன்கள் தங்கம் நகைகளாகவும், 1310 டன்கள் தங்கம் நாணயங்கள் மற்றும் கட்டிகளாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 15 ஆண்டுகளில் இந்திய குடும்பங்கள் வாங்கிய மொத்த தங்கத்தின் மதிப்பு மட்டும் தற்போதைய தங்கத்தின் விலை கொண்டு மதிப்பீடு செய்து பார்த்தால் 59 லட்சம் கோடி அதாவது 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என பிசினஸ் லைன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
உலக தங்க கவுன்சில் இந்திய குடும்பங்கள் வசம் 25,000 டன்கள் தங்கம் இருப்பதாக கடந்த ஆண்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்திய தங்க கொள்கை மையம் கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின் படி தென்னிந்திய கோயில்களில் மட்டும் 3000 முதல் 5000 டன்கள் தங்கம் இருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் கூட இவ்வளவு தங்கம் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி 879 டன்கள் தங்கத்தை கொண்டு இருக்கிறது. இந்தியாவசம் இருக்கும் தங்கத்தின் மொத்த அளவு 30,000 டன்கள் . இதன் மதிப்பு 3.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது உலக அளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள தங்கத்தில் 14 சதவீத தங்கம் இந்தியாவில் தான் இருக்கிறதாம்.
தங்கத்தை பொருத்தவரை இந்தியாவில் கலாச்சார ரீதியிலான தொடர்பு கொண்டது. ஒரு குழந்தை பிறந்தது தொடங்கி நம் வீட்டின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தங்கம் முக்கியமான அங்கம் வகிக்கிறது. குறிப்பாக திருமணம் போன்ற நிகழ்வுகளில் எல்லாம் தங்கம் தான் முக்கிய கவனம் பெறுகிறது.
இந்திய குடும்பங்களை பொறுத்தவரை சேமிப்பு ,முதலீடு என்றாலே அனைவரும் முதலில் வாங்கி வைப்பது தங்கத்தை தான் . மாதம் தோறும் சீட்டு போட்டு அல்லது கையில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தாலே உடனடியாக அதற்கு ஒரு தங்கத்தை வாங்கி வைத்து விடுவார்கள். இது தான் உலகளவில் குடும்பங்கள் வசம் அதிகம் தங்கம் கையிருப்பு கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்கி இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?



Click it and Unblock the Notifications