4 நாள் தொடர் சரிவு.. 7 லட்சம் கோடி இழப்பு.. 8 முக்கிய காரணம்..!!

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய வர்த்தக குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு தொடர்ந்து 4 நாள் சரிந்து வரும் வேளையில் பங்கு முதலீட்டாளர்கள் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர். இந்த பெரும் சரிவுக்கு 8 காரணங்கள் உள்ளது, இதன் அடிப்படையில் தான் கடந்த 4 நாட்களாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 927.74 புள்ளிகள் சரிந்து 59,744.98 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு ஒரே நாளில் 1.53 சதவீதம் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் 272.40 புள்ளிகள் சரிந்து 17,554.30 புள்ளிகளை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐடிசி மட்டுமே உயர்வுடன் இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது, மற்ற 29 நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4 நாளில் 7 லட்சம் கோடி ரூபாய் சரிவுக்கு என்ன காரணம்..?

உலகளாவிய சந்தைகள்

உலகளாவிய சந்தைகள்

வால் ஸ்ட்ரீட் 2023 இல் அதன் மோசமான வர்த்தக நாள்-ஐ செவ்வாய்கிழமை எதிர்கொண்டது. S&P 500 2% சரிந்தது, டிசம்பர் மாதம் அதிகப்படியான பங்கு விற்கப்பட்டதிலிருந்து அதன் கூர்மையான வீழ்ச்சி செவ்வாய்க்கிழமை பதிவானது. டவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு 697 புள்ளிகள் அல்லது 2.1% இழந்தது, அதே நேரத்தில் நாஸ்டாக் காம்போசிட் 2.5% சரிந்தது.

இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை மொத்தமும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

சர்வதேச பிரச்சனைகள்

சர்வதேச பிரச்சனைகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதன் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்பு ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பதற்றத்தில் உள்ளது. இது கட்டாயம் முதலீட்டு சந்தையை பாதிக்கும்.

அமெரிக்க மத்திய வங்கி

அமெரிக்க மத்திய வங்கி

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் உயர்வு குறித்து தகவல்களை இன்று வெளியிட உள்ள FOMC கூட்டத்தின் முடிவுகளில் இருக்கும். இதன் வாயிலாகவும் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் பத்திர சந்தைக்கு திரும்பி வருகிறது.

அதானி பங்குகள்

அதானி பங்குகள்

 

போர்ப்ஸ் அறிக்கையை தொடர்ந்து, நேற்று விக்கிபீடியா அதானி குழுமம் குறித்து பல முக்கிய குற்றசாட்டுகளை அடுக்கியது. இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் அதானி பங்குகளின் சந்தை மதிப்பு 40000 கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 98 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இன்று மாலை ஆர்பிஐ வட்டி விகிதம் உயர்த்தி தனது கண்ணோட்டம் அடங்கிய நாணய கொள்கை கூட்ட முடிவுகள் அறிக்கை வெளியாக உள்ளது. ஆர்பிஐ ஏற்கனவே தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

நிஃப்டி குறியீடின் முக்கிய சப்போர்ட் அளவிலான 17800 புள்ளிகளை தாண்டினால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரையில் பங்குகளை விற்பனை செய்ய துவங்குவார்கள். இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு ஓரே நாளில் 1.53 சதவீதம் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் 272.40 புள்ளிகள் சரிந்து 17,554.30 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதனால் அதிகப்படியான பங்குகள் விற்பனை செய்யப்படும் காலம் துவங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்


சீனா மற்றும் பிற வளரும் நாடுகளில் தற்போது அதிகப்படியான டாலர் ஸ்டாக் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பெறும் விற்பனையாளராக உள்ளனர்.

இதேபோல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது ஷாட் பொசிஷன்-ஐ பணமாக்கி வரும் காரணத்தாலும் பங்குகள் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

பத்திர முதலீடு

பத்திர முதலீடு

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என அதிகளவில் நம்பப்படும் நிலையில் அமெரிக்க அரசின் 2 ஆண்டு கருவூல பத்திரம் ஓரே நாளில் 3 மாத உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல் 10 வருட அரசு பத்திரம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+