டிசம்பர் மாதம் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வேளையில், இதற்கு பல முக்கியமான காரணங்கள் சூழ்ந்து இருந்தாலும், உள்நாட்டுச் சந்தையில் நடக்கும் ஒரு விஷயம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. டிசம்பர் மாதம் தங்கம் விலை 0.14 சதவீதம் வரையில் குறைந்துள்ளது, நவம்பர் மாதத்தின் 3.18 சதவீத சரிவு டிசம்பர் மாதமும் எதிரொலித்து வருகிறது.
இந்தியாவில் தங்கம் விலை பெரிய அளவில் குறைய முக்கியமான காரணம் நகைக் கடைக்காரர்கள் மற்றும் தங்கத்தை அதிகளவில் இருப்பு வைத்திருக்கும் ஸ்டாகிஸ்ட்களும் தங்கம் விலை தொடர்ந்து குறையும் என கணக்கிட்டு உள்ளதால், தங்களிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பை வேகமாகக் குறைத்து வருகின்றனர் என இந்திய சரஃபா சங்கத்தின் தரவுகள் கூறுகிறது.

இந்த அதிகப்படியான விற்பனை காரணமாகத் தங்கம் விலை 10 கிராம் தனது ஆதிக்கம் நிறைந்த ரூ.80,000 அளவீட்டில் இருந்து கீழே இறங்கியுள்ளது. மேலும், சர்வதேசச் சந்தைகளில் நிலவும் பலவீனமான வர்த்தக போக்கு தங்கத்தின் விலையைக் கடுமையாகப் பாதித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
உலகளவில் தங்கம் வாங்கும் மத்திய வங்கிகளில் இந்தியா ஒன்றாக இருந்தாலும், வல்லரசு நாடுகள் தங்கத்தை வாங்குவதை மொத்தமாக நிறுத்தியுள்ளது. இதில் முக்கியமாகச் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை அடங்கும். இதேபோல் தங்கத்திற்கு மாற்றாக தற்போது அமெரிக்க அரசு பத்திரம், கிரிப்டோகரன்சி ஆகியவை முக்கிய இடத்தை எட்டியுள்ளதால், தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அமெரிக்கப் பொருளாதார தரவுகளான உற்பத்தியாளர் விலை குறியீட்டு எண் (PPI) குறைவாகவும், அதிக வாராந்திர வேலையின்மை கோரிக்கைகள் அதிகமாகவும் வந்ததால், அமெரிக்காவில் இருந்து கலவையான லாபத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தங்கம் அதிகளவில் விற்கப்பட்டு வேகமாகச் சரிந்து வருகிறது.
தரவு வெளியீட்டிற்குப் பிறகு, வர்த்தகர்கள் இன்னும் அடுத்த அமெகிக்க பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் (bps) வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்க்கின்றனர், ஆனால் அடுத்த ஆண்டுக்கான பணவியல் கொள்கையின் பாதை மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கவலையான சூழ்நிலையில் தான் தங்கத்தை வாங்க ஆள் இல்லாமல் தொடர்ந்து சரியும் போக்கில் உள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்திருந்த நிலையில், லாபம் ஈட்டும் நோக்கில் நகைக்கடைக்காரர்கள் மற்றும் பங்குதாரர்கள் அதிக அளவில் தங்கத்தை விற்பனை செய்ததே விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். இதேபோல் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்தும், இந்தியாவில் அதன் விலையில் தாக்கத்தைக் கட்டுப்படுத்த டாலர் என்ற பூதம் உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 900 ரூபாய் குறைந்து 71,400 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 980 ரூபாய் குறைந்து 77,890 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 720 ரூபாய் குறைந்து 57,120 ரூபாயாக உள்ளது.
இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாயும், கிலோவுக்கு 1000 ரூபாயும் குறைந்து 1 லட்சம் ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 10 கிராம் பிளாட்டினம் விலை 250 ரூபாய் குறைந்து 25,190 ரூபாயாக உள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 0.01 சதவீதம் சரிந்து 77,130 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.01 சதவீதம் அதிகரித்து 91,013 ரூபாயாக உள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2648 டாலராக உள்ளது.
More From GoodReturns

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!



Click it and Unblock the Notifications