இந்தியாவில் கடந்த ஆறு வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் நகை கடைக்கு செல்வது பெரிய அளவில் குறைந்துள்ளதால் நகை கடைகளும் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து வருகிறது.
இதை இப்படியே விட்டுவிட்டால் மக்கள் தங்கத்தை வாங்குவதை நிறுத்திவிடுவார்கள் என்பதை உணர்ந்த நகைக் கடைக்காரர்கள் மாற்று வழியை யோசிக்க துவங்கியுள்ளனர். மக்கள் தங்க நகை வாங்க வேண்டும், அதேநேரத்தில் விலையும் குறைவாக இருக்க வேண்டும். என்ன வழி..?

தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் தங்க விலை உயர்வை சமாளித்து வாடிக்கையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க, பல நகைக் கடைகள் குறைவான தரம் அதாவது குறைவான கேரட் கொண்ட தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கில், வைர நகைகளுக்கு 18 கேரட் தங்கத்திற்கு பதிலாக 14 கேரட் தங்கத்தில் அதிகப்படியான நகைகளையும், 22 கேர்ட் வெறும் தங்க நகைகளுக்கு மாறாக 18 கேரட் தங்க நகைகளை கொண்டு வர துவங்கியுள்ளது. குறிப்பாக வைர பதித்த நகைகள் தற்போது அதிகளவில் 14 கேரட் தங்கத்தால் செய்யப்படுவதை கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் வைரம் பதித்த நகைகளின் விற்பனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒருபக்கம் ரஷ்யாவில் இருந்து வரும் வைரம் மீதான நெருக்கடியும், மறுபக்கம் தங்கம் விலை உயர்வும் ஒன்றாக தேர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை உயர்வு வைர நகை வியாபாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் தேவையையும் குறைத்துள்ளது.
பொதுவாக இந்தியாவில் விற்கப்படும் நகைகள் அனைத்தும் 22 கேரட் தங்கத்தில் தான் செய்யப்படுகிறது. கடந்த சில வருடத்திற்கு முன்பு துபாய், அமெரிக்காவில் இருந்து வருவோர் 24 கேரட் தங்க நகைகளை வாங்கியது வழக்கமாக இருந்தது, ஆனால் இது அதிகம் டேமேஜ் ஆகும் காரணத்தால் 24 கேரட் நகைகள் வாங்குவது குறைந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்பு தங்க விலை உயர்ந்த போது 18 கேரட் தங்க ஆபரணங்கள் அறிமுகமாகி சந்தையை கலக்கியது. தற்போது இளம் தலைமுறையினர் அதிகளவில் 18 கேரட் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். ஆனால் கடந்த 6 வாரம் தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள உயர்வு 14 கேரட் தங்க நகைகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில், இந்தியாவில் தங்க விலை 10.6% உயர்ந்துள்ளது. இதனால் நகை கடைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த தருணத்தில் தான் வாடிக்கையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க, நகைக்கடைக்காரர்கள் தற்போது 14 கேரட் தங்க நகைகளை, வைரம் பதித்த 14 கேரட் தங்க நகைகளையும் அறிமுகம் செய்ய துவங்கியுள்ளனர்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நகை நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸ், 14 கேரட் வைர பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு, இவர்களது லைஃப்ஸ்டைல் பிராண்டான கண்டேரே 14 கேரட் நகைகளை தனித்தனியாக விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 18 கேரட் தங்க ஆபரணங்களின் கலெக்ஷன்களையும் அதிகரித்து வருகின்றனர்.
இதேபோல மலபார் கோல்டு, வட இந்தியாவில் பிரபலமான சென்கோ ஆகியவையும் வைரம் பதித்த 14 கேரட் தங்க நகைகளையும், 18 கேரட் வெறும் தங்க நகைகளின் கலெக்ஷன்களை அதிகரித்துள்ளது.
18 கேரட் தங்க நகையில் 75 சதவீதம் தங்கம் இருக்கும், 14 கேரட் தங்க நகையில் 58 சதவீத தங்கம் இருக்கும்.
More From GoodReturns

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications