சென்னை: சில காலமாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளன. நடப்பு நிதியாண்டின் Q 1 காலாண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 13 % அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் பெரும்பாலானோரை திடுக்கிட வைத்துள்ள நிலையில் இந்திய நகை பிராண்டுகள் தனது கிளைகளை தொடர்ந்து அமெரிக்காவில் விரிவுபடுத்துகின்றன என்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடினமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் முக்கிய இந்திய நகை பிராண்டுகள் தனது கிளைகளை தொடர்ந்து அமெரிக்காவில் விரிவுபடுத்துகின்றன என்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிரீமியம் நகை பிராண்டுகள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்களது கிளைகளை விரிவாக்கம் செய்கின்றன. கடந்த ஆண்டு, டாடா குழுமத்தின் அங்கமான தனிஷ்க் பிராண்ட், அமெரிக்காவில் ஹூஸ்டன், ஃபிரிஸ்கோ மற்றும் நியூ ஜெர்சி ஆகிய இடங்களில் மூன்று ஸ்டோர்களை அறிமுகப்படுத்தியது, மேலும் மார்ச் 2024 இல் சிகாகோவில் இன்னொரு கிளையைத் துவக்கியுள்ளது.
தனிஷ்க் பிராண்ட் விரிவாக்கம், அறிமுகமில்லாத பகுதி என்பதால், அதன் கிளைகளை நிறுவுவதில் சில பிரச்சனைகள் இருந்தாலும், அதன் அதிகரித்த தேவை காரணமாக தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
மேலும், நடப்பு நிதியாண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நியூ ஜெர்சி மற்றும் சிகாகோவில் தனது புதிய கிளைகளை நிறுவவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள வும்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ், டெக்சாஸ் அருகே உள்ள ஃப்ரிஸ்கோவில் செயல்படும் கடையைத் தவிர, அமெரிக்காவில் மேலும் மூன்று கிளைகளைத் திறக்க உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வும்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ்-இன் நிர்வாகப் பங்குதாரரான அமரேந்திரன் வும்மிடி, சிம்பிளான தங்க நகை மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளுடன் இருப்பதற்கு தங்க நகைகளை வாங்குகின்றனர் எனக் கூறியுள்ளார்.
மேலும், அமரேந்திரன் வும்மிடி, அந்நிறுவனம் பத்து புதிய கலெக்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ளவர்கள் வெஸ்டர்ன் உடைகளுக்கு ஏற்றவாறு காதணிகளை வாங்குவதில் ஆர்வம் மிகுந்தவர்களாக உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்த கலெக்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் உலகளவில் 138 ஷோரூம்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்த நிறுவனம் சிகாகோ, நியூ ஜெர்சி, டல்லாஸ் ஆகிய இடங்களில் கடைகளைத் திறந்தது. அமெரிக்காவில் மேலும் 6 புதிய கிளைகளைத் திறக்க உள்ளதாகவும்
தெரிவித்துள்ளது. துபாயைத் தளமாகக் கொண்ட நிறுவனமான மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் சுமார் ரூ. 4,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாக TOI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலபார் குழுமத்தின் தலைவரான எம்.பி. அகமது கூறுகையில், இந்தியாவில் அழகாக செதுக்கப்படும் நகைகள், மற்றும் பிற நகை கடைகளுக்காக அவர்கள் நிர்ணயிக்கும் போட்டி விலைகளுமே அமெரிக்கா சந்தையில் தங்கம் வேரூன்றி இருக்கக் காரணமாக உள்ளது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications