இந்திய பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை கடுமையான சரிவுடன் தொடங்கியது முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒருப்பக்கம் இந்திய முதலீட்டாளர்களுக்கு முக்கியமான முதலீடாக இருக்கும் தங்கம் விலை தொடர் சரிவு, மறுப்புறம் இளம் தலைமுறையினரின் விருப்பமாக இருக்கும் பங்குச்சந்தை பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 954 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்து 75,070-ஆகவும், நிஃப்டி 50 சுமார் 334 புள்ளிகள் சரிந்து 23,305-ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. காலை 10.14 மணியளவில் பதிவான இந்த சரிவு, கடந்த ஒரு ஆண்டில் இல்லாத அளவுக்கு பெரிய வாராந்திர இழப்பை நோக்கி செல்கிறது. இந்த மோசமான காலக்கட்டத்தில் முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு முதலீட்டை வெளியேற்றாமல் நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு முதலீடு செய்யவே பங்குச்சந்தை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பங்குச்சந்தையில் ஏற்படும் மோசமான சரிவுக்கு ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வருவது முக்கிய காரணமாக உள்ளது. இந்த போர் மூலம் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் அளவுக்கு உள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக முதலீட்டு சந்தை தலைகீழாக மாறியுள்ளது.
இன்றைய வர்த்தக சரிவின் வாயிலாக பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 6.55 லட்சம் கோடி ரூபாய் குறைந்து 433 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் இருக்கும் டாப் நிறுவனங்களில் L&T, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், இண்டிகோ மற்றும் HDFC வங்கி ஆகியவை 2-4 சதவீதம் சரிந்தன. இதில் பவர்கிரிட், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே சிறிது உயர்ந்தன.
ஈரான்-இஸ்ரேல் மோதல் உலக சந்தைகளை பெரிதும் பாதித்துள்ளது. எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அச்சம், முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தேடல் ஆகியவை இந்திய சந்தையை மோசமாக பாதித்து வருகிறது.
ஈரான்-இஸ்ரேல் போர் இரண்டு வாரங்களை நெருங்கியுள்ள நிலையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் ட்ரோன் தாக்குதலில் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் கிடங்கில் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போரின் காரணமாக ஹார்முஸ் நீர்வழி பாதை ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில், இப்பாதையில் அமெரிக்காவின் கடற்படை பாதுக்காப்புடன் எண்ணெய் மற்றும் ஏரிவாயு கப்பல்கள் அனுப்பப்படும் என டிரம்ப் அறிவித்தார். ஆனால் இதை செயல்படுத்த முடியாத நிலையில் அமெரிக்க கடற்படை உள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. Brent crude சுமார் 101 டாலராகவும், WTI crude 96 டாலராக வர்த்தகமாகிறது.
இந்த பதற்றம் உலக பங்குச்சந்தைகளையும் பாதித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் சீன சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் S&P 500 மற்றும் Nasdaq குறியீடுகளும் கணிசமாக குறைந்தன.
இதன் தாக்கமாக இந்திய ரூபாய் மதிப்பும் பாதிப்பை சந்தித்து டாலருக்கு எதிராக 92.34 வரை குறைந்துள்ளது. எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரிப்பதால் ரூபாய்க்கு அழுத்தம் அதிகரிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர். கடந்த 10 வர்த்தக நாட்களில் மட்டும் சுமார் 57,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications