நடப்பு ஆண்டில் கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தாலும், வேலையின்மை, தொழில்துறை வீழ்ச்சி, பொருளாதார சரிவு, இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் மட்டும் ஏற்றத்தினை கண்டு வருகின்றன.
சர்வதேச அளவில் கொரோனா பரவலின் காரணமாக நடப்பு ஆண்டில் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவும் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பெஞ்ஸ்மார்க் குறியீடான நிஃப்டி இது வரையில் 65% ஏற்றம் கண்டுள்ளது.
நிஃப்டி ஏற்றம்
இதன் காரணமாகவும் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பெஞ்ஸ்மார்க் குறியீடான நிஃப்டி இது வரையில் 65% ஏற்றம் கண்டுள்ளது.
2021 சிறந்த ஆண்டு
ஆக கடந்த 2010ம் நிதியாண்டினை காட்டிலும் 2021ம் நிதியாண்டு மிக சிறந்ததாக இருக்கலாம் என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், 2021ம் ஆண்டில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு மற்றும் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. இதே சமயத்தில் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதே கடந்த 2010ம் நிதியாண்டில் அன்னிய முதலீடுகளை விட, உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு அதிகமாக இருந்தது.
Array
நடப்பு ஆண்டில் இதுவரை அன்னிய நிறுவனங்களின் முதலீடுகள், கிட்டதட்ட 30 பில்லியன் டாலர்களாக இந்திய சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது கடந்த 2010ல் வெறும் 7 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது. எப்படி இருப்பினும் நடப்பு ஆண்டில் எதிர்ப்பார்ப்பினை விட, தேவை விரைவாக மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தை மீண்டும் ஏற்றத்தினை காணலாம்.
Array
நடப்பு ஆண்டில் ஸ்மால் கேப் பங்குகள் கூட, கடந்த 2010ல் போல சிறந்த ஆண்டாக இருக்கும். நடப்பு ஆண்டில் இதுவரையில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் முறையே 81 சதவீதம் மற்றும் 97 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளன. இதே கடந்த 2010ல் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் முறையே 130 சதவீதம் மற்றும் 161 சதவீதம் ஏற்றம் கண்டன.
என்ன காரணம்?
தற்போது பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில், தேவை மீண்டு வந்து கொண்டுள்ளது. நுகர்வும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதே சமயம் முதலீடுகளும் அதிகரித்துக் கொண்டுள்ளன. ஆக மீதமுள்ள இந்த காலத்திலும் சந்தை நல்ல ஏற்றத்தினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2010ஐ போலவே, அல்லது அதனை விட அதிகமாகவே இந்த நிதியாண்டில் லாபம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications