இந்திய மக்களையும் தங்கத்தையும் பிரிக்க முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும், இப்படியிருக்கையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை சமீபத்தில் ரீடைல் கடைகளில் குறைந்துள்ளது அனைவரும் உணர்ந்த ஒரு விஷயம்.
கடைசியாக நாம் எப்போது தங்கம் வாங்கினோம் என்று நீங்கள் யோசித்தாலே இது புரிந்துவிடும். கொரோனா தொற்று காலத்தில் பங்குச்சந்தை தடாலடியாக சரிந்த நிலையில் மக்கள் அதிகப்படியான பணக்கை தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கியது முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்விலேயே உள்ளது.

இப்படியிருக்கையில் தங்கம் விலை அதிகமாகியிருப்பதால் மக்கள் தங்கத்தை நேரடியாக ரீடைல் சந்தையில் வாங்கவில்லை என்றாலும் பல மாற்று வழிகளில் தங்கத்தை தொடர்ந்து வாங்கத்தான் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக பிரபல ரீடைல் நகை கடைகளில் கிடைக்கும் மாதாந்திர நகை சேமிப்பு திட்டத்தில் மக்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த மாற்று தங்க முதலீட்டு திட்டத்தில் மத்திய அரசின் தங்க முதலீட்டு பத்திரமும் முக்கிய பங்கு வகித்தாலும், நகை கடைகளில் இருக்கும் மாதாந்திர தங்க நகை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கையும், முதலீடு செய்யும் பணத்தின் அளவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது அனைத்தும் தங்கம் விலை உயர்வால் நடந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
டாடா குழுமத்தின் தனிஷ்க் 2023 ஆம் நிதியாண்டில் தங்க டெபாசிட் திட்டம் வாயிலாக 3890 கோடி ரூபாய் பெற்றுள்ளது, இது கடந்த வருடம் 2701 கோடி ரூபாயை காட்டிலும் 44 சதவீதம் அதிகமாகும். இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் 2023 ஆம் நிதியாண்டில் 282 கோடி ரூபாய் பெற்ற நிலையில் முந்தைய ஆண்டு 184 கோடி ரூபாயாக இருந்தது.
பொதுவாக ரீடைல் தங்க நகை விற்பனையாளர்கள், இத்தகைய தங்க வைப்பு நிதி திட்டத்தின் கீழ் தவணைகளில் தள்ளுபடி கொடுக்கிறார்கள், சிலர் நகையில் செய்கூலி, சேதார அளவீட்டில் தள்ளுபடி கொடுக்கிறார்கள். உதாரணமாக தனிஷ்க் கோல்டு ஹார்வெஸ்ட் திட்டத்தின் 10 மாத தவணை திட்டத்தில் முதல் மாத தவணையில் 75 சதவீதம் வரையில் சேமிப்பு அளிக்கப்படுகிறது.
இதேபோல் மகாராஷ்டிரா, கோவா போன்ற நகரங்களில் 42 கடைகள் உடன் இயங்கும் PNG ஜுவல்லர்ஸ் 27 சதவீத உயர்வுடன் 700 கோடி ரூபாய் மதிப்பிலான டெபாசிட் தொகையை பெற்றுள்ளது. கொல்கத்தாவின் பிரபலமான Senco Gold 89 சதவீத உயர்வுடன் 192 கோடி ரூபாய் மதிப்பிலான டெபாசிட் தொகையை பெற்றுள்ளது.
நீங்க தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்துள்ளீர்களா மறக்காம கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications