இனி கவலை இல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்.. ஏன் தெரியுமா..!!

இந்திய மக்கள் மத்தியில் பெட்ரோல் விலை உயர்வால் பெட்ரோல் வாகனங்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ள இதேவேளையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான விருப்பம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல் டீசல் வாகனங்களை விடவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் அதிகமானோர் இதை வாங்குவதற்குத் தயங்குகின்றனர்.

இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட தூரத்திற்குப் பயன்படுத்த போதுமான சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகள் இல்லாத காரணத்தாலும் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர்.

அதிகப்படியான விலை பிரச்சனைக்கு ஒருபக்கம் ஆட்டோமொபைல் நிறுவனம் தீர்வு காணும் நிலையில், சார்ஜிங் ஸ்டேஷன் பிரச்சனைக்கு இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் முக்கியத் திட்டத்தை வகுத்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை முழுமையாகக் குறைக்க வேண்டியது கட்டாயம் என்றாலும், அது உடனே சாத்தியமும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் மக்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த ஏதுவான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கப் பெட்ரோல் பங்க்-கிற்கு இணையாகச் சார்ஜிங் ஸ்டேஷன்-ம் அதிகரிக்கப்பட வேண்டும்.

மாற்று எரிபொருள்

மாற்று எரிபொருள்

மத்திய அரசு பெட்ரோல், டீசலை தவிர்த்து மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், பெட்ரோல் - டீசல் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய இரு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் வர்த்தகத்திலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு உள்ளது.

10,000 சார்ஜிங் ஸ்டேஷன்

10,000 சார்ஜிங் ஸ்டேஷன்

இதற்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்-களை இந்தியா முழுவதும் நிறுவத் திட்டமிட்டு உள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஐ ஆகியவற்றில் வர்த்தகம் செய்து வந்த இந்தியன் ஆயில் இனி எலக்ட்ரிக் வாகனங்கள் வர்த்தகத்திலும் இறங்க உள்ளதாக இந்தியன் ஆயில் தலைவர் எஸ்எம் வைத்தியா தெரிவித்துள்ளார்.

3 வருட இலக்கு

3 வருட இலக்கு

இத்திட்டத்தின் படி அடுத்த 12 மாதத்தில் 2000 சார்ஜிங் ஸ்டேஷன், இந்த 2000 சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் அனுபவத்தை வைத்து பணிகளை எளிதான முறையில் திட்டமிட்டு அடுத்த 2 வருடத்தில் 8000 சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இப்படி அடுத்த 3 வருடத்தில் நாடு முழுவதும் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க உள்ளதாக எஸ்எம் வைத்தியா தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

இந்தியன் ஆயில் போலவே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் டாடா பவர் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

5000 சார்ஜிங் ஸ்டேஷன்

5000 சார்ஜிங் ஸ்டேஷன்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஜூலை 2021 நிலவரத்தின் படி 100 நகரங்களில் 500 சார்ஜிங் ஸ்டேஷன்கள் வைத்திருந்த நிலையில் அக்டோபர் மாதம் 1000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துச் சாதனை படைத்தது. இந்நிலையில் டாடா பவர் உடனான இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 4 வருடத்தில் 5000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இரு நிறுவனங்கள்

இரு நிறுவனங்கள்

இப்படி நாட்டின் இரு முன்னணி இரு எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளதால், அடுத்த ஒரு வருடத்திற்குள் கைக்கு எட்டும் தூரத்தில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கும். இதனால் மக்கள் இனி எலக்ட்ரிக் வாகனங்களை எவ்விதமான கவலையும் இல்லாமல் வாங்க முடியும்.

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

இதுமட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான வரி சலுகையும் உண்டு என்பதால் மக்களுக்கு அனைத்து விதத்திலும் லாபமே. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் மின்சார உற்பத்தியும் அதிகரித்தால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை இல்லாமல் மின்சாரத்தின் விலை உயராமல் இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+