டெல்லி : கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நஷ்டம் 2,253.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகமாகும்.
இதுவே கடந்த 2018 - 2019ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 487.26 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 342 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்துள்ளது இந்த வங்கி.

இதே கடந்த மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் 5,024 கோடி ரூபாயாக உள்ளது. இதே முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 5,348.35 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த வங்கியின் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 20 சதவிகிதமாக (28,673.95 கோடி ரூபாயாக) நிலை நிறுதப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 24.73 சதவிகிதமாக (37,109.96 கோடி ரூபாயாக) இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 1,204 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதனால் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் நஷ்டம் அதிகரித்துள்ளது. எனினும் வருவாய் குறைந்து நஷ்டம் அதிகரித்த போதிலும் இதன் வாராக்கடன் சற்று குறைந்திருப்பது நல்ல விஷமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வங்கியின் பிஎஸ்.இ சந்தை மதிப்பு 1,233.43 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே இதற்கு முன்பு 9,717.57 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
இந்த நிலையில் இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட நிலையில், அன்று 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும், தற்போதைய நிலையில் இன்று இதுவரை 3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மத்திய அரசு இந்தியன் ஒவர்சீஸ் வங்கிக்கு கூடுதல் மூலதனமாக 3,857 கோடி ரூபாயை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது துவண்டு போயுள்ள இந்த வங்கிக்கு மேலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும், தொடர் நஷ்டத்தினை சரிசெய்யவும், இந்திய ரிசர்வ் வங்கி உத்தவிட்டுள்ள நிலையில், கடந்த இரண்டாவது காலாண்டில் முன்பை விட 5 மடங்கு நஷ்டம் கண்டுள்ளது இந்த வங்கி.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications