இந்திய வங்கிகளின் விதிமுறை மீறல்களை கண்டிப்பான முறையில் கண்காணித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து பல வங்கிகள் மீது அபராதம் விதித்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் கோ ஆப்ரேடிவ் வங்கிகளின் நிதி நிலையை தீவிரமாக ஆய்வு செய்து அதிகளவிலான நிதி பிரச்சனையில் இருக்கும் வங்கிகளின் உரிமத்தை கூட ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வருமான அங்கீகாரம் மற்றும் சில ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-க்கு இந்திய ரிசர்வ் வங்கி 2.20 கோடி அபராதம் விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அபராதம் ஒழுங்குமுறை விதிகளை கடைப்படிக்காத காரணத்தால் வங்கி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-யில் வாடிக்கையாளர்களுடன் வங்கி மேற்கொண்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் கீழ் விதிக்கப்படவில்லை என்பதை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்திற்கும் டெபாசிட் செய்யப்பட்டு உள்ள பணத்திற்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என உறுதியாகியுள்ளது. வங்கியின் மேற்பார்வை மதிப்பீட்டிற்கான சட்டப்பூர்வ ஆய்வு மார்ச் 31, 2021 ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்டது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2020-21 ஆம் ஆண்டிற்கான வெளியிட்ட லாபத்தில் 25 சதவீதத்திற்கு சமமான தொகையை கட்டாயமாக reserve fund-க்கு ஒதுக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டது முக்கிய விதிமீறலாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications