விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் சிலரின் தற்போதைய செயல்களை வைத்தே எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவார்கள் என்பார்கள். உதாரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 49 சதங்களை அடித்து இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவரிடம் உங்கள் சாதனையை எந்த வீரர்கள் முறியடிப்பார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகிய இருவர்களில் எனது சாதனை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருந்தார். அவர் கணித்த மாதிரி அண்மையில் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் 50 சதவீதத்தை அடித்து சச்சின் சாதனையை முறியடித்தார்.

இதே போல் தொழில்துறையிலும் சிலர் முந்தைய ஜாம்பவான்களை காட்டிலும் பெரிய இடத்தை சிலர் அடையவர் என்று கூறப்படுவது உண்டு. அந்த வகையில், உலகின் மெகா கோடீஸ்வரரான எலான் மஸ்க்கு போட்டியாக ஒரு நாள் இவர் கண்டிப்பாக வருவார் என்று ஒரு இந்தியர் ஒருவரை பெருமையாக குறிப்பிடுகிறார்கள்.
எலான் மஸ்க் உலகின் மெகா கோடீஸ்வரராக ஆவதற்கான பயணத்துக்கு அவரது எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா மற்றும் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் வெற்றி பாதை அமைத்து கொடுத்தது. இதே போன்ற வாய்ப்பு இந்தியாவை சேர்ந்த ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவரும், இஸ்ரோவின முன்னாள் பணியாளருமான பவன் குமார் சந்தனாவுக்கும் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இணை நிறுவனர். இந்நிறுவனம் தான் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் ஐ உருவாக்கியுள்ளது. காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர் பவன் குமார் சந்தனா. அதன் பிறகு இஸ்ரோவில் பணியாற்றினார்.
இஸ்ரோ விஞ்ஞானியான அவர் 6 ஆண்டுகள் கழித்து இஸ்ரோ வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறினார். பின்னர் சக ஐ.ஐ.டி.மற்றும் முன்னாள் இஸ்ரோ சக பணியாளரான நாகா பாரத் டாக்காவுடன் இணைந்து ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் முதல் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸை நிறுவினார்.
சந்தனாவின் ஸ்கைரூட் நிறுவனம், ராக்கெட் ஏவுவதற்கு முன்னும் பின்னும் ஒருங்கிணைக்கு வசதி, ஏவுதளம், ரேஞ்ச் தகவல்தொடர்புகள் போன்ற இஸ்ரோவின் சேவைகளை நியாயமான கட்டணத்தை செலுத்தி பயன்படுத்தியது.
2022 நவம்பர் 18ம் தேதியன்று முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் எஸ் ராக்கெட் மூன்று சிறிய செயற்கைகோளுடன் ஏவப்பட்டது. இந்த முயற்சி வெற்றியடைந்தது. இறக்குமதி செய்யப்பட்ட சில சென்சார்களை தவிர்த்து, விக்ரம் எஸ் ராக்கெட் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. விக்ரம் 1 மற்றும் விக்ரம் 2 ராக்கெட்டுக்களையும் உருவாக்கியுள்ளனர்.
நம் நாட்டின் விண்வெளி திட்டத்தின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராக்கெட்டுகளுக்கு விக்ரம் என்று அவர்கள் பெயர் சூட்டினர். ஸ்கைரூட் நிறுவனம் இதுவரை சுமார் ரூ.800 கோடி நிதி திரட்டியுள்ளது.
2022ம் ஆண்டில் சீரிஸ் பி (நிதி திரட்டல்) சுற்றின் போது இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.1,304 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிறுவனம் இந்திய தனியார் விண்வெளி துறையில் முன்னணியில் உள்ளது. 2040ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி துறையின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications