இருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், எந்தவொரு வேலைவாய்ப்பும் நிலையாக இருக்குமா? இல்லையா? என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில் பல தனியார் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்க பணி நீக்கம் செய்து வருகின்றன.

இல்லையெனில் சம்பளத்தை குறைக்கின்றன. இந்த நிலையில் பலரின் பார்வை அரசு பணிகளின் பக்கம் திரும்பியுள்ளது என்றே கூறலாம்.

2000 ரூபாய் நோட்டுக்களை டீமானிட்டைஸ் செய்யுங்கள்..! முன்னாள் நிதி செயலர் அதிரடி..!2000 ரூபாய் நோட்டுக்களை டீமானிட்டைஸ் செய்யுங்கள்..! முன்னாள் நிதி செயலர் அதிரடி..!

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

இந்த நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 1.2 லட்சம் காலியிடங்களுக்கு, சுமார் 2.4 கோடி பேர் விண்ணபித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ரயில்வேயில் இரண்டு விதமான வேலை வாய்ப்புகளுக்கு அறிவிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. அசிஸ்டெண்ட் லோகோ பைலட் 64,371 காலியிடங்களும், இதே டெக்னீசியன் பணிக்கு 63,202 காலியிடங்களும் (குரூப் டி) இருப்பதாக கூறப்பட்டது.

அம்மாடியோவ் 1 வேலைக்கு 301 பேர் போட்டியா

அம்மாடியோவ் 1 வேலைக்கு 301 பேர் போட்டியா

இது ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 47.45 லட்சம் விண்ணப்பதாரர்கள், 64,371 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறியுள்ளது. ஒரு வேலைக்கு 74 பேர் விண்ணபித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே டெக்னீசியன் பணிக்கு 1.9 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதன் மொத்த காலியிடங்கள் வெறும் 63,202 பேர் என்றும் கூறப்படுகிறது. இங்கு ஒரு வேலைக்கு 301 போட்டியாளர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 ஜூனியர் என்ஜினியர் பதவிக்கு மவுசு தான்

ஜூனியர் என்ஜினியர் பதவிக்கு மவுசு தான்

இந்த தேர்வானது ஜனவரி 21 முதல் ஜனவரி 23 வரையில் மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் முறையே 77 சதவிகிதம் மற்றும் 88 சதவிகிதம் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, இதே ரயில்வே நிர்வாகம் 13,500 ஜூனியர் என்ஜினியர்களுக்கான தேர்வுக்கு 27.75 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், இதில் ஒரு பதவிக்கு 183 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அரசு வேலையில் ஆர்வம் அதிகரிப்பு

அரசு வேலையில் ஆர்வம் அதிகரிப்பு

இந்திய ரயில்வே நிர்வாகம் மட்டும் அல்ல, எந்தவொரு அரசு தேர்வாக இருந்தாலும் சரி, அங்கு ஒரு பதவிக்கு பல ஆயிரம் பேர் விண்ணபிப்பது வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்தாலும், தற்போதைய காலத்தில் இது வெகுவாக அதிகரித்து வருவதை காணமுடிகிறது. ஏனெனில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் எந்த ஒரு வேலைக்கும் உறுதி சொல்ல முடியாத நிலையில், தற்போது அரசு வேலைகளுக்கு இன்னும் போட்டி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐ.ஐ,டி மாணவர் ஒருவர் டிராக்மேன் பணியானாலும் https://tamil.goodreturns.in/news/2019/08/27/iit-bombay-graduate-takes-up-railway-trackman-job-for-safety-015824.html பரவாயில்லை. இது அரசு பணி என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian railway announced 2.4cr peoples applied for 1.2lakh vacancies

Indian railway announced 2.4cr peoples applied for 1.2lakh vacancies. it's created heavy competition for peoples.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X