தனியார் வேலைக்கு உத்தரவாதம் இல்லை.. டிராக்மேன் பணியானாலும் அரசு வேலை.. ஐஐடி மாணவர் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : ஐஐடியில் படித்த ஒரு மாணவர், ரயில்வே தேர்வு எழுதி, அதிலும் ரயில்வே துறையில் டி பிரிவில் டிராக்மேன் பணிக்கு தேர்வாகியுள்ளார். அதிலும் 10 வகுப்பு மட்டுமே தகுதியாக கொண்டுள்ள டிராக்மேன் பணிக்கும் தேர்வு எழுதி அதில், வெற்றியும் பெற்றுள்ளார்.

 

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷ்ரவன் குமார் என்பவர் பிடெக் மற்றும் எம்டெக் படிப்பினை, மும்பை ஐ.ஐ.டியில் கடந்த 2015லியே முடித்துள்ளார்.

 
தனியார் வேலைக்கு உத்தரவாதம் இல்லை.. டிராக்மேன் பணியானாலும் அரசு வேலை.. ஐஐடி மாணவர் அதிரடி!

ஐ.ஐ.டியில் படித்த ஒரு மாணவர், ரயில்வே துறையில் அதிலும் டி பிரிவில் உள்ள வேலையில் சேர்ந்திருப்பது, அதிகாரிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

ஷ்ரவன் தற்போது பொதுப்பணிகள் ஆய்வாளரின் கீழ் சந்திரபுரா பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் தற்போது சந்திரபுரா மற்றும் டெலோ பிரிவுக்கு இடையிலான பாதையை பராமரிப்பதை மேற்கொண்டு வருகிறாராம்.

ஷ்ரவன் குமாரின் பேச்சு, தன்பாத் ரயில்வே பிரிவின் பல மூத்த அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்களாம். உயர் தகுதி வாய்ந்த ஒரு மனிதர் டி பிரிவு வேலையில் சேருவார் என்று ஒருபோதும் அவர்கள் நினைத்ததில்லை என்றும் கூறுகிறார்களாம்.

மேலும் ஷ்ரவனுடன் படித்த சகமாணவர்கள், நல்ல துறையில் உயர் பதவிகளில் இருந்தாலும், ஷ்ரவன் குமாரையும் தங்களுடன் அழைத்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்துள்ளவர், தனக்கு சிறு வயதில் இருந்தே, அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வமே இருந்து வந்ததாகவும், மேலும் தொடர்ந்து அரசு பணிக்காக முயன்று வந்துள்ளதாகவும், இன்னும் உயர் பதவிக்காக முயலப் போவதாகவும் ஷ்ரவன் கூறியுள்ளாராம்.

இது குறித்து ஷ்ரவன் குமார் கூறுகையில், தான் மேலும் மேலும் உயர் அதிகாரிகள் அளவுக்கு போவேன் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளாராம். மேலும் தனது நண்பர்கள் தனது மனதை மாற்ற எவ்வளோ மாற்ற முயற்சி செய்தும் முடியாமல் கைவிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

இன்றைய நாளில் தனியார் வேலைகளை எந்த உறுதியும் இல்லை, ஆக அரசு பணிகளில் பாதுகாப்பு இருப்பதாக நான் உணர்கறேன். இதனால் தான் நான் அரசு பணியை தேர்தெடுத்துள்ளேன் என்றும் கூறுகிறாராம்.

இவர் கூறுவதும் ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும், படித்து முடித்தவர்கள் அனைவரும் அரசு பணி தான் வேண்டும் என்று நினைத்தால், அரசு வேலை வாய்ப்பு என்பது பலருக்கு கணவாகவே போய்விடும். எங்கே போவது படித்தவர்கள் அனைவரும் அரசு வேலைக்கு?

தற்போதைய நிலையிலேயே வெறும் 10,000 வேலை வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், 10 லட்சம் பேர் அதற்காக பதிவு செய்கிறார்கள். இனி இது வருகாலத்தில் எப்படி இருக்குமே என்ற கேள்வியைத்தான் எழுப்பிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IIT Bombay graduate takes up Railway Trackman job for safety

IIT Bombay graduate takes up Railway Trackman job for safety
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X