அட கொரோனாவ விடுங்க பாஸ்.. அதவிட மோசமான நிலையில் ரூபாய்.. ஆர்பிஐ மனசு வச்சா தான் சரியாகும்..!

இந்தியா ரூபாய் கொரோனா வைரஸால் பாதிக்கப்படக் கூடும் என்ற அறிகுறிகள் உள்ளன. ஆனால் உண்மையில் நாம் அதைவிட மோசமான நோயினால் தாக்கப்பட்டுள்ளோம். அது ரூபாய் வீழ்ச்சி தான்.

சொல்லப்போனால் சீனாவில் கொரோனா தாக்கம் அறிந்ததில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு 0.2% தான் பலவீனமடைந்துள்ளது.

இதே சிங்கப்பூர் டாலர், மலேசியாவின் ரிங்கிட், தாய்லாந்து நாட்டு கரன்சியான தாய் பாத் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்புகள் 2% அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சீனாவின் யுவான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நாடுகள் நெருக்கடியான சூழலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரூபாய் மோசமான நிலை

ரூபாய் மோசமான நிலை

மேற்கண்ட நாணயங்களின் லிஸ்டில் இந்திய ரூபாய் இடம் பெறவில்லையே என்று சந்தோஷப்படாதீர்கள். ஏனெனில் நாம் அதைவிட மோசமான நிலையில் தான் இருக்கிறோம் என்கிறது இந்த அறிக்கை. ஆதாரத்துடன் சொல்லப்போனால் கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து இந்திய நாணயம் 3% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு மற்ற நாட்டு நாணயங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று தான் கூற வேண்டும்.

ஆசிய கரன்சிகள் நல்ல செயல்பாடு

ஆசிய கரன்சிகள் நல்ல செயல்பாடு

ஆனால் இதே நேரத்தோடு ஒப்பிடும்போது நமது ஆசிய சாகாக்கள் நல்ல முறையில் செயல்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நாட்டிற்குள் டாலர்கள் வருவதை மிக எளிதாக்கியுள்ளது. உலகளாவிய பத்திர குறியீடுகளில் சேர்ப்பதற்கான நோக்கத்தில், மத்திய வங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்திய பத்திரங்களில் பெரிய அளவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

பலவீனம் நிச்சயம்

பலவீனம் நிச்சயம்

ரிசர்வ் வங்கி அன்னிய முதலீடுகளை வரவேற்க நினைக்க அதே வேளையில், ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதையும் தடுத்து வருகிறது. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பரிமாற்ற விகிதம் அதன் பொருளாதார வளர்ச்சியிலிருந்து வலிமையை பெறுகிறது. எனவே ரூபாயின் பலவீனம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

ரூபாய் இப்படியும் இருக்கலாம்

ரூபாய் இப்படியும் இருக்கலாம்

மேலும் ரிசர்வ் வங்கியின் பார்வை என்னவென்றால் ரூபாயின் மதிப்பு டாலருக்கு 71 - 72 ரூபாயாக இருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 0.03% அதிகரித்து 71.21 ரூபாயாக அதிகரித்துள்ளது.

படு மோசம்

படு மோசம்

இந்திய பொருளாதாரத்தில் உள்ள படு வீழ்ச்சி மற்றும் பணவீக்கத்தின் எழுச்சியால் இந்தியா ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. அதுவும் இது ஆசிய நாணயங்களில் மிக மோசமான வீழ்ச்சி என்றும் கடந்த மாதம் வெளிவந்த அறிக்கையில் கூறப்பட்டது.

. இதை வைத்து பார்க்கும் போது சீனாவின் கொரோனா வைரஸை விட, இந்திய ரூபாய் மிக மோசமான நிலையில் தான் உள்ளது. அதை மீட்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கியிடம் தான் உள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ரிசர்வ் வங்கி இதற்கு என்ன தடுப்பு மருந்தை உபயோகிக்க போகிறது என்று..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+