இந்தியர்களுக்கும் தங்கத்திற்கும் இடையிலான உறவு பிணைக்க முடியாதது என்பது உலகறிந்த உண்மை. உலகிலேயே அதிக அளவு தங்கத்தை நுகரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவிற்கு தேவையான பெரும்பாலான தங்கத்தை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நகையாக மாற்றி பயன்படுத்துகிறோம். இந்திய குடும்பங்களை பொறுத்தவரை தங்க நகை என்பது ஒரு குடும்பத்தின் அந்தஸ்தாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பார்வை வெகுவாக மாறிவிட்டது என்கின்றனர் நகை விற்பனையாளர்கள்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எந்த மாதிரியான தங்க நகைகளுக்கு வரவேற்பு இருக்கிறது, விலை உயர்வு தங்க நகை விற்பனையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்பதை தெளிவாக கூறுகின்றனர். தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் பல மடங்கு உயர்ந்தது எனவே தற்போது தங்கத்தை போலவே மக்கள் வெள்ளியையும் முக்கிய உலோகமாக பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்கு முன்பு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட நகைகள் வாங்கும் போது அது தங்கமாக இருக்க வேண்டும், அதாவது தங்கத்தில் கற்கள் பதிக்கப்பட்டிருந்தால் தான் மக்கள் வாங்குவார்கள் ஏனெனில் அது பார்ப்பதற்கே மிக ஆடம்பரமான ஒரு பார்வையை தரும். ஆனால் தற்போது அது மாறி இருப்பதாக கூறுகிறார் திரிஷன் ஜீவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரிவா திர்.

தங்கத்தின் விலை அதிகரித்ததால் ஏராளமானவர்கள் வெள்ளியில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகைகளை அதிகமாக வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாக கூறுகிறார். பிஎன்ஜி ஜூவல்லர்ஸின் சுரேஷ் கிருஷ்ணா தற்போது நகைக்கடைகளுக்கு வருகை தருகிறார்கள் அவர்கள் வெள்ளியின் விலையும் விசாரிக்கிறார்கள் தங்கத்தின் விலையும் விசாரிக்கிறார்கள் எது பட்ஜெட்டிற்கு பொருந்துகிறதோ அதை வாங்குகிறார்கள் என்கிறார். முன்பெல்லாம் தங்கம் வாங்க வந்தால் இருக்கும் பணத்திற்கு தங்கத்தை தான் வாங்குவார்கள் ஆனால் இப்போது வெள்ளிக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள் என்கிறார்.

வெள்ளியிலேயே நவீன டிசைன்கள் கொண்ட கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் கிராண்டான லுக் தருவதால் இளசுகள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதாக கூறுகிறார். கேரட் லேன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஏராளமான வாடிக்கையாளர்கள் தற்போது ஆன்லைனில் தங்களுக்கு தேவையான டிசைன் அவற்றின் விலை இவற்றையெல்லாம் பார்த்து முடிவு செய்துவிட்டு தான் கடைகளுக்கே வருகிறார்கள் என்கிறார்.
குறைந்த எடை கொண்ட நவீன வடிவமைப்பு கொண்ட நகைகளுக்கு தற்போது வரவேற்பு இருக்கிறது என கூறுகிறார். இதற்கு முன்பு ஒரு தங்க நகையை வாங்கும்போது ஒரு குடும்பமாக வருவார்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் அது பிடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போது தாங்கள் வாங்கும் நகை தங்களின் கேரட்கடருக்கும் ஸ்டிலைக்கும் ஏற்றபடி இருக்கிறதா என பார்க்கிறார்கள் என்கிறார்.
நவீன தலைமுறைக்கு ஏற்ப வடிவமைப்புகளையும் குறைந்த எடை கொண்ட நகைகளையும் தயாரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ந்கை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.இளம் தலைமுறையினர் கனமான நகைகளுக்கு மாற்றாக லைட் வெயிட் எனப்படும் குறைந்த எடை கொண்ட நகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்கின்றனர். திருமணம் போன்ற விசேஷங்களுக்கு நகை வாங்குவதிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications