ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை பெரும் சரிவை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு ரத்த கண்ணீர் வரவழைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 2,400 புள்ளிகள் வீழ்ந்து 76,424-ஆகவும், நிஃப்டி 50 சுமார் 700 புள்ளிகள் சரிந்து 23,750-ஆகவும் தொடங்கியது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உடைந்து நொறுங்கியது.

காலை 9:20 மணியளவில் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 12.39 லட்சம் கோடிக்கு மேல் குறைந்து 437 லட்சம் கோடியாக சரிந்தது. இது கடந்த வார இழப்பை மேலும் மோசமாக்கியுள்ளது. இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது கச்சா எண்ணெய் விலை உயர்வு.

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மத்தியிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 115 டாலரை தாண்டியது. உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்பட்டது வாயிலாகவும், வளைகுடா நாடுகள் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

பங்குச்சந்தையின் இன்றைய சரிவு ஒரு சில துறையை சார்ந்து இல்லாமல் மொத்தமாக அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் உருவாகப்போகும் பணவீக்க உயர்வும் தான். இவை இரண்டும் இந்திய ரீடைல் சந்தையை தலைகீழாக புரட்டிப்போடும்.

Also Read

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டில் அனைத்து நிறுவனங்களும் சிவப்பு நிறத்தில் ரத்தகளறியாக மாறியது. இண்டிகோ பங்கு 8 சதவீதம் சரிந்தது. டாடா ஸ்டீல், எல்அண்ட்டி, எஸ்பிஐ, மாருதி சுசுகி, இடர்னல் பங்குகள் தலா 5 சதவீதம் சரிந்தன.

என்எஸ்இ-யில் நிஃப்டி பிஎஸ்யூ வங்கி குறியீடு 5 சதவீதத்துக்கு மேல் சரிந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. நிஃப்டி ஆட்டோ 4 சதவீதம், நிஃப்டி ரியாலிட்டி மற்றும் நிஃப்டி பிரைவேட் வங்கி குறியீடுகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிந்தன.

மொத்தத்தில், ஈரான் போர் எண்ணெய் விலையை $100-ஐ தாண்டச் செய்துள்ளது. இது இந்திய பங்குச் சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. சென்செக்ஸ் 2,400 புள்ளிகள், நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்துள்ளன. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு பெரிதும் உயரும். பணவீக்கம் தீவிரமாகும். முதலீட்டாளர்கள் இந்த சூழலை கவனமுடன் அவதானிக்க வேண்டும். உலக நாடுகள் இந்த பதற்றத்தை தீர்க்க முயற்சி செய்ய வேண்டிய நேரம் இது. இந்தியா மாற்று எண்ணெய் ஆதாரங்களை தேட வேண்டும்.

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இன்றைய 12 லட்சம் கோடி இழப்புக்கு முக்கியமான காரணம் இதுதான்:
கச்சா எண்ணெய் விலை $100-ஐ கடந்தது
மத்திய கிழக்கு பதற்றம் அதிகரித்ததால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது. WTI மற்றும் Brent கச்சா எண்ணெய் விலை $118 வரை உயர்ந்து பல வருட உச்சத்தை தொட்டுள்ளது. ஹார்முஸ் நீர் வழி பதையில் எண்ணெய் விநியோகத்தின் 20% செல்லும் நிலையில், ஈரான் படைகள் இதை கைப்பற்றியிருக்கும நிலையில் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் சந்தையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மத்திய கிழக்கு போர் தீவிரம்
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்ததால் உலக முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். இந்த மோதலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற அறிகுறிகள் தற்போது இல்லை.

ரூபாய் மதிப்பு சரிவு
எண்ணெய் விலை உயர்வின் தாக்கமாக இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 92.34-ஐ கடந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வெளியேற்றம் ரூபாயின் மதிப்பை பெரிதும் பாதித்து வகுகிறது.

Recommended For You

அமெரிக்க பத்திரப் முதலீடு
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக அமெரிக்க அரசுப் பத்திரங்களின் (US Treasury) முதலீடு அதிகரித்து வட்டி விகிதம் உயர்ந்து முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை விட பாதுகாப்பான முதலீடுகளுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்று வருகின்றனர். மார்ச் மாதத்தின் துவக்கத்தில் இருந்து அதிகளவில் விற்பனை செய்து வரும் காரணத்தால் இதை உள்நாட்டு முதலீட்டாளர்கள் நிரப்பி வருகின்றனர்.

சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவு
எண்ணெய் விலை உயர்வு உலக சந்தைகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளன. அதேபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியுடன் முடிந்துள்ளன.

இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து ரூபாய் மீது அழுத்தம் உருவாகலாம். இறக்குமதி செலவுகள் அதிகரிப்பதால் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை
போர் போன்ற அரசியல் பதற்றங்கள் சந்தையை தற்காலிகமாக மட்டுமே பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் தற்போது நீண்டகால முதலீட்டை டார்கெட் செய்து பணத்தை முதலீடு செய்ய வேண்டும் எனவும், விலை குறைவை Buying வாய்ப்பாக பார்க்கலாம் என கூறுகின்றனர். ஆனால் எப்போது வாங்குகிறோம், எப்போது பங்குகள் சரிவு பாதையில் இருந்து உயர்வு பாதைக்கு திரும்புகிறது என்பதை கண்காணித்து முதலீடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+