ரூ.4.26 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவுக்கு என்ன காரணம்..?

சென்னை: அமெரிக்காவில் பங்குச் சந்தை வியாழக்கிழமை வர்த்தகத்தில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் குறியீடு வெள்ளிக்கிழமை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின. குறிப்பாக வங்கி, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எனர்ஜி துறை பங்குகள் அதிகளவில் வீழ்ச்சியடைந்ததால் இந்திய பங்குசந்தை முதலீட்டாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றைய வர்த்தகத்தில் BSE சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 80,995.70 என்ற குறைந்தபட்ச அளவீட்டைச் சந்தித்தது. அதேபோல், NSE நிஃப்டி 50, 287 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,723.70 புள்ளிகள் வரையில் சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் தான் சென்செக்ஸ் 82000 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்தது.

ரூ.4.26 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவுக்கு என்ன காரணம்..?

இதனிடையே, BSE-யில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மதிப்பு ரூ.4.26 லட்சம் கோடி குறைந்து, மொத்த மதிப்பு ரூ.457.36 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. அனைத்து முக்கிய துறை குறியீடுகளும் அதிகப்படியான நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

இதில் முக்கியமாக நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடுகள் 2% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதோடு நிஃப்டி ஸ்மால்கேப் 100 மற்றும் நிஃப்டி மிட்கேப்100 குறியீடுகள் தலா 1% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளன.

அமெரிக்க உற்பத்தி மேலாளர் குறியீடு (ISM) ஜூலை மாதத்தில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 46.8 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஜூன் மாதத்தில் 48.5 புள்ளிகளிலிருந்து குறைந்துள்ளது தான் அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகும்.

மேலும், அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக அரசின் நிதியுதவியைக் கோரும் நபர்களின் எண்ணிக்கை ஜூலை 26-ம் தேதியில் முடிவடைந்த வாரத்தில் 249,000 ஆக அதிகரித்துள்ளது, இதுவும் அமெரிக்க சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தித் துறை சரிவு கண்டதால் அங்குள்ள பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளதால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் எதிர்பார்ப்பு தணிந்துள்ளது.

ஆசிய சந்தைகளும் அமெரிக்காவின் உற்பத்தித் துறை தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் நிக்கி பங்குச் சந்தை குறியீடு 0.8% சரிந்து கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. இதற்கு யென் நாணயத்தின் மதிப்பு உயர்வு, உள்நாட்டு வட்டி விகிதம் உயரக்கூடும் என்ற அச்சமுமே காரணம்.

இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் கஜாவில் ஹமாஸ் இராணுவப் பிரிவின் தலைவர் முகமது தெய்ஃபை கொன்றதாகவும், அதற்கு முந்தைய நாளில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் கொல்லப்பட்டதையும் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கமும் சந்தைகளை பாதித்துள்ளது.

முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால், பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.

இந்திய பங்குச் சந்தையானது தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளதால் மதிப்பீடுகள் அதிகரித்துள்ளன. தற்போது இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 150% அதிகமாக உள்ளது. இது ஒரு சாதனை உயர்வு ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+