இந்திய பங்குச்சந்தை இன்று (வியாழக்கிழமை) முதலீட்டாளர்களின் அதிகப்படியான பங்கு விற்பனையை எதிர்கொண்டதன் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1130 புள்ளிகள் சரிந்து 72,334.18 என்ற மோசமான நிலையைக் கொட்டது. இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 370 புள்ளிகள் சரிந்து, ஏப்ரல் 19ம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக 22,000 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது.

சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 1062.22 புள்ளிகள் (1.45%) சரிவில் 72,404.17 என்ற புள்ளியிலும், நிஃப்டி 50 345 புள்ளிகள் (1.55%) சரிந்து 21,957.50 என்ற புள்ளிகளை அடைந்து வர்த்தகம் முடிவடைந்தது.
நான்காம் காலாண்டு லாப அறிக்கைகள் மற்றும் தேர்தலில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைத்துள்ளன. இதன் விளைவாக இந்தியாவின் volatility குறியீடான இந்தியா விக்ஸ் குறியீடு 6.5% உயர்ந்து 18.20 என்ற அளவை எட்டியது. இது தொடர்ச்சியாக 11 நாளாக உயர்ந்து வருகிறது.
இதன் மூலம் இன்று முதலீட்டாளர்கள் ரூ.7.3 லட்சம் கோடி மதிப்பிலான பங்குச்சந்தை முதலீட்டை இழந்து தவித்து வருகின்றனர். மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு ரூ.400 லட்சம் கோடிக்குக் கீழ் சரிந்து ரூ.393.73 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருக்கம்: 2024ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் மூன்று கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய உற்சாகம் குறைந்து, சந்தையில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.
பெரிய நிறுவனங்களின் சரிவு: ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ (L&T) போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு, இன்றைய பங்குச்சந்தை சரிவில் முக்கிய பங்காற்றியது.
சர்வதேச சந்தைகளின் எதிர்மறையான போக்கு: அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு மற்றும் அமெரிக்காவில் வேலை இழப்புத் தொகை குறித்த தரவுகள் அந்நாட்டுப் பங்குச்சந்தையை மந்த நிலைக்குத் தள்ளியுள்ளது மட்டும் அல்லாமல் உலகளாவிய பங்குச்சந்தைகளில் எதிர்மறையான போக்கிற்குத் தள்ளியது.
ஐரோப்பிய Stoxx 600 குறியீடு நான்கு நாட்களாக உயர்ந்த பின்னர் சிறிய அளவிலான மாற்றத்தையே கண்டது, அதே சமயம் வால் ஸ்ட்ரீட் தொடக்கத்தில் S&P 500 குறியீடு குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்: மே 8 அன்று எஃப்ஐஐகள் ரூ.2854 கோடி மதிப்பிலான இந்தியப் பங்குகளை விற்பனை செய்தன. இதன் மூலம் மார்ச் மாதத்தில் விற்பனையின் போக்கு ஏப்ரல் மாதத்திலும் தொடர்கிறது. எஃப்பிஐக்கள் கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் ரூ.5,076 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளன. ஏப்ரல் 16-30 தேதியில் சுமார் 27410 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் விலைகள் வியாழன் அன்று ஆரம்ப வர்த்தகத்தில் அதிகரித்தது, அமெரிக்கக் கச்சா எண்ணெய் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் சந்தையில் கடுமையான விநியோகம் நிலவுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications