வெறும் 3 நாளில் ரூ.11.6 லட்சம் கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!

இந்திய சந்தையைப் புரட்டிப்போட்டு வரும் அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் 32,000 வார்த்தைகள் கொண்ட அறிக்கை பெரும் பாதிப்பை இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

இன்றைய வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் சில நிறுவன பங்குகள் கணிசமாக உயர்ந்தாலும் ஹிண்டன்பர்க் அமைப்பின் அறிக்கை வெளியாகி 3 வர்த்தக நாளில் மட்டும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 11.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை முதலீட்டை இழந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசமான சரிவில் பிணையச் சேதமாக அதானி பங்குகள் உடன் வங்கிப் பங்குகளில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியான பின்பு அதானி குழும பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தையைப் பெரிய அளவில் பாதித்தது. இந்த 3 நாள் வர்த்தகத்தில் அதானி குழுமம் மட்டும் அல்லாமல் மும்பை பங்குச்சந்தையும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

பிஎஸ்இ

பிஎஸ்இ

ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியான பின்பு மும்பை பங்குச் சந்தைகளில் உருவான தாக்கம் மூலம் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளின் சந்தை மூலதனம் மூன்று நாளில் 268.8 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டி

சென்செக்ஸ், நிஃப்டி

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 169.51 புள்ளிகள் உயர்ந்து 59500.41 புள்ளிகளாக உள்ளது. இதேபோல் நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தக நாள் முடிவடைவதற்கு முன்பு, நிஃப்டி 3 மாத குறைந்தபட்சத்தைத் தொட்டு மீண்டும் 17,648.95 புள்ளிகளை அடைந்தது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான பணப்புழக்கங்களை உருவாக்கவில்லை என்பதை ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறியது மட்டும் அல்லாமல் அதிகப்படியான கடன், கணக்கியல் முறைகேடுகள் செய்ததாகத் தெரிவித்தது.

2,400 புள்ளிகள்

2,400 புள்ளிகள்

இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, நிஃப்டி வங்கி குறியீடு 2,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை பாதித்தது. இதற்கு முக்கியமான காரணம் வங்கிகளும் அதானி குழுமத்திற்கு அதிகப்படியான கடனை கொடுத்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி

ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி

இன்றைய வர்த்தகத்தில் காலை வங்கி பங்குகள் அதிகமான சரிவை சந்தித்தாலும், மாலை வர்த்தகம் முடியும் போது சரிவில் இருந்து மீண்டது. ஆனால் ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி சரிவுடனே உள்ளது.

5 லட்சம் கோடி இழப்பு

5 லட்சம் கோடி இழப்பு

ஹிண்டன்பர்க் அமைப்பின் அறிக்கை வெளியாகி 3 வர்த்தக நாளில் மட்டும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 11.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை முதலீட்டை இழந்த நிலையில் அதானி பங்குகள் மூலதனம் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை இழந்துள்ளது.

25% இழப்பு

25% இழப்பு


இந்தச் சரிவு மூலம் அதானி குழுமம் தனது மொத்த சந்தை மதிப்பீட்டில் நான்கில் ஒரு பங்கை இழந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 10 அதானி குழும பங்குகளில் அதானி எண்டர்பிரைசஸ் மட்டுமே உயர்வுடன் முடிந்தது. மற்ற அனைத்து நிறுவனங்களும் சரிவுடன் முடிந்தது.

அதானி எண்டர்பிரைசஸ்

அதானி எண்டர்பிரைசஸ்

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO இன் காலவரிசையையோ அல்லது விலையையோ மாற்றப்போவதில்லை என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

FPO திட்டம்

FPO திட்டம்

மேலும் 30ஆம் தேதி முடிவில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO திட்டத்திற்கு 3 சதவீத பங்குகளுக்கு மட்டுமே முதலீடு குவிந்துள்ளது. இதனால் பெரும் தோல்வி உடன் முடிவடையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+