கொழும்பு: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்நாட்டின் பொருளாதாரம் இன்னும் அதலபாதாளத்தில்தான் இருக்கிறது. அண்மைக்காலமாக அது மேலும் மோசமடைந்துள்ளது.
உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதால் மக்கள் அங்கு பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் துரிதமாகச் செயல்படுத்தி வருகிறது.

இலங்கையில் சுற்றுலா பயணிகளை கவரும் வரலாற்று தொன்மை வாய்ந்த தலங்கள், கண்கவர் சுற்றுலா மையங்கள், புராதன கோயில்கள் அதிகளவில் உள்ளன. எனவே இதை வைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இதையடுத்து இலங்கைக்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு நல்ல வருவாய் வரத் தொடங்கியுள்ளது. இலங்கைக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் அங்கிருக்கும் உறவினர்களைப் பார்ப்பதற்கு நிறைய பேர் செல்கின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு செல்லும் இந்தியர்களுக்கு 30 நாள் இலவச விசாவை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் இருந்து செல்லும் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்தது. இதனிடையே இந்த இலவச விசாவில் எவ்வளவு நாள் தங்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த விசா தேவையில்லை என்ற திட்டம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டினருக்கும் அளிக்கப்படும் என இலங்கை வெளியுறவுத் துறை அதிகரித்தது.
இந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இலங்கை சுற்றுலாத்துறைக்கு நிறையவே வருமானம் வரத் தொடங்கியது.
ஆனால் கடந்த 2019 ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
இலங்கை அரசு அறிவித்த விசா தேவையில்லை திட்டத்தின்படி முதல் 30 நாட்களுக்கு அங்கு விசா இல்லாமல் தங்கிக் கொள்ளலாம். இலங்கைக்கு வருபவர்களுக்கு விமானநிலையத்திலேயே இருவழிக்கான பயணச் சலுகையும் தரப்பட்டது. ஆனால் 30 நாட்கள் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றுப்பூர்வமான உறவு இருப்பதால் இந்தியாவில் இருந்துதான் அதிகளவில் பயணிகள் செல்கின்றனர்.
பொருளாதார சீரழிவில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச நிதியமான இண்டர்நேஷனல் மானிட்டரி ஃப்ண்டு 300 பில்லியன் டாலர்களை கடனுதவியாக அளித்துள்ளது. இதன்மூலம் தனது பொருளாதார சிக்கல்களை இலங்கை அரசு சமாளித்து வருகிறது.
இந்நிலையில் இலங்கை அரசின் இலவச விசா திட்டத்தின்கீழ் ஒரு மாத காலம் தங்கியிருக்கலாம். அதன் பிறகு தங்க நேரிட்டால் அதற்கான விசா கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பதை சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications