இந்தியா கடந்த 50 வருடத்தில் பல மாற்றங்களை எதிர்கொண்டுள்ள வேளையில் மக்களின் வாழ்க்கை, விருப்பம், தேவை என அனைத்திலும் பெரிய மாற்றம் உருவாகியுள்ளது.
குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் அதிலும் முக்கியமான பெரு நகரங்களில் இருக்கும் இளம் தலைமுறையினர் மத்தியில் சொத்து வீடு வாங்குவது தவறான முடிவு, சொந்தமாக கார் வாங்குவது தவறான முடிவு போன்ற கருத்துக்களை உறுதியாக நம்புகின்றனர்.
ஆனால் இதற்கு முந்தைய தலைமுறை சொந்த வீடு வாங்கி ஹோம் லோன்-ஐ முழுமையாக கட்டி முடிப்பது என்பதே வாழ்வின் முக்கிய சாதனையாக பார்க்கப்பட்டது. இதேபோன்ற மாற்றம் இளம் பெண்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது, இந்த மாற்றம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது.
இந்திய பெண்கள்
பொதுவாக இந்திய பெண்களுக்கு தங்கம் மற்றும் தங்க நகைகள் மீதும் அதிகப்படியான ஆர்வம் காதல் இருப்பது தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம், நிதியுதவி என அனைத்திலும் பெண்களுக்கு முக்கிய இடம் கிடைக்கும் காரணத்தால் அவர்களின் முதலீட்டு விருப்பமும் பெரிய அளவில் மாறியுள்ளது.
Anarock நிறுவனம்
Anarock என்னும் ரியல் எஸ்டேட் கன்சல்டென்ட் நிறுவனம் பெண்கள் மத்தியில் தங்களுக்கு பிடித்த அல்லது விருப்பமான முதலீடு என்ன என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு மூலம் இந்திய பெண்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
ரியல் எஸ்டேட் தான் முக்கியம்
இந்த ஆய்வில் 65 சதவீதம் பேர் ரியல் எஸ்டேட் என்பதை தங்களது விருப்பமான முதலீடாக கருதுகின்றனர். இதை தொடர்ந்து 20 சதவீதம் பேர் பங்குகள், 8 சதவீதம் பேர் தங்கம், 7 சதவீதம் பேர் வைப்பு நிதி முதலீடுகளை தங்களது விருப்ப முதலீடாக பார்க்கின்றனர். இந்த ஆய்வில் சுமார் 5500 பேர் கலந்துக் கொண்ட நிலையில் 50 சதவீதம் பேர் பெண்கள், இந்த நிலையில் பெண்களின் பதில்களின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
45-90 லட்சம் மதிப்பிலான வீடு
இதுமட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்பும் பெண்களில் 83 சதவீதம் பேர் 45 லட்சம் ரூபாய்க்கு அதிகமான மதிப்புடைய வீட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். 45-90 லட்சம் மதிப்பிலான வீட்டில் முதலீடு செய்ய 36 சதவீத பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தலைகீழாக மாறும்
அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும் போது வர்த்தக சந்தை நிலை தலைகீழாக மாறும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. பொதுவாக பெண்களுக்கும் தங்கம் மீதும் தான் மோகம் அதிகம் என்ற நிலை மாறியுள்ளது.
புதுமை பெண்கள்
படித்து வேலைக்கு போகும் பெண்கள் முதல் சொந்தமாக தொழில் துவங்கும் பெண்கள் வரையில் முதலீட்டு விருப்பத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை பார்க்க முடிகிறது. இது தொடர்ந்தால் தங்கத்திற்கான டிமாண்ட் அடுத்த தலைமுறையிடம் இருக்காது என எதிர்பாரக்கப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க..?!


Click it and Unblock the Notifications